Coffee with NEET Day 1 [ Attributes of living organisms | உயிரினங்களின் பொதுப்பண்புகள் ]


 Attributes of living organisms | உயிரினங்களின் பொதுப்பண்புகள்

 1. Earth was formed some 4.6 billion years ago 

 2. புவி தோன்றிச் சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகளாகிறது

 3. According to a survey made by Mora et al., 2011 the number of estimated species on earth is 8.7 million

 4. மோராவும் அவரது சக ஆய்வாளர்களும் 2011-ல் மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவாக, புவியில் ஏறத்தாழ 8.7 மில்லியன் சிற்றினங்கள் வாழ்ந்து வருவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது

 5. The living world includes microbes, plants, animals and human beings which possess unique and distinct characteristic feature

 6. உயிரி உலகம் என்பது நுண்ணுயிரிகள், தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் போன்றவற்றை உள்ளடக்கி  தனிச்சிறப்புமிக்க தெளிவான பல பண்புகளைக் கொண்டுள்ளன.

 7. The attributes of living organisms are | உயிரினங்களின் பொதுப்பண்புகள்

 1.  Growth |வளர்ச்சி
 2. Metabolism | வளர்சிதை மாற்றம்
 3. Reproduction | இனப்பெருக்கம்
 4. Irritability | உறுத்துணர்வு

Growth |வளர்ச்சி
 1. Growth is an intrinsic property of all living organisms through which they can increase cells both in number and mass. | வளர்ச்சி அனைத்து உயிரினங்களில் நடைபெறக்கூடிய ஓர் அகம் சார்ந்த (intrinsic) பண்பாகும். இந்நிகழ்வின்போது செல்களின் எண்ணிக்கையும், பொருண்மையும் அதிகரிக்கின்றன 

 2. Unicellular and multicellular organisms grow by cell division. | ஒரு செல், பல செல் உயிரினங்கள் அனைத்துமே செல்பிரிதல் மூலம் வளர்ச்சியடைகின்றன

 3. In plants, growth is indefinite and occurs throughout their life. | தாவரங்களின் வளர்ச்சி வரம்பற்றும், வாழ்நாள் முழுவதும் நடைபெறுகிறது

 4. In animals, growth is definite and occurs for some period. | விலங்குகளில் ஒருகுறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே வரம்புடைய வளர்ச்சி நடைபெறுகிறது

 5. Growth in non-living objects is extrinsic. | உயிரற்ற பொருட்களின் வளர்ச்சி வெளியார்ந்ததாகும்

 6. Living cells grow by the addition of new protoplasm within the cells. | உயிருள்ள செல்களுக்குள்ளாகப் புதிய புரோட்டோபிளாசம் அதிக அளவில் சேர்க்கப்படுவதால் வளர்ச்சி ஏற்படுகிறது

 7. In unicellular organisms like Bacteria and Amoeba growth occurs by cell division and such cell division also leads to the growth of their population. | ஒரு செல் உயிரிகளான பாக்டீரியங்கள் மற்றும் அமீபாவில் செல் பகுப்பு நடைபெறுவதால் வளர்ச்சி ஏற்படுவதோடு மட்டுமின்றி உயிரினத் தொகையும் அதிகரிக்கின்றது

 8. Hence, growth and reproduction are mutually inclusive events. | இங்கு வளர்ச்சியும் இனப்பெருக்கமும் பரஸ்பரம் உள்ளடக்கிய செயல்பாடுகளாக விளங்குகின்றன

 • Metabolism | வளர்சிதை மாற்றம்

 1. The sum of all the chemical reactions taking place in a cell of living organism is called metabolism | உயிருள்ள செல்களில் நடைபெறுகின்ற அனைத்து வேதிவினைகளையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக வளர்சிதை மாற்றம் என்கிறோம்

 2. It is broadly divided into anabolism and catabolism | இது இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை வளர் மாற்றம், சிதைவு மாற்றம் ஆகும்

 3. Anabolism | வளர் மாற்றம்

 • Building up process | புரோட்டோபிளாச கட்டமைப்பு வினைகள்

 • Smaller molecules combine together to form larger molecule | சிறுசிறு மூலக்கூறுகள் இணைந்து பெரிய மூலக்கூறு உண்டாக்கப்படுகிறது

 • Chemical energy is formed and stored | வேதிய ஆற்றல் உருவாக்கப்பட்டு சேமிக்கப்படுகிறது

 • Example: Synthesis of proteins from amino acids | எடுத்துக்காட்டு: அமினோ அமிலங்கள் சேர்ந்து புரதம் உற்பத்தியாதல்

 1. Catabolism |  சிதைவு மாற்றம்

 • Breaking down process | சிதைவூட்டும் வினைகள்

 • Larger molecule break into smaller units | பெரிய மூலக்கூறு சிறுசிறு மூலக்கூறுகளாக உடைக்கப்படுகிறது

 • The stored chemical energy is released and used | சேமிக்கப்பட்ட வேதிய ஆற்றல் வெளிவிடப்பட்டு பயன்படுத்தப்படுகிறது

 • Example: Breaking down of glucose to CO2 and water | எடுத்துக்காட்டு: குளுக்கோஸ் மூலக்கூறு நீராகவும், CO, ஆகவும் சிதைவுறுதல்


 • Reproduction | இனப்பெருக்கம்

 1. Reproduction is one of the fundamental characteristic features of living organisms | இனப்பெருக்கம் உயிரினங்களின் அடிப்படைப் பண்புகளில் ஒன்றாகும்

 2. It is the tendency of a living organism to perpetuate its own species | உயிரினங்கள் அனைத்தும் தங்களை ஒத்த சந்ததிகளை உருவாக்குகின்றன

 3. There are two types of reproduction namely asexual and sexual | இது பாலிலா இனப்பெருக்கம், பாலினப்பெருக்கம் என இரண்டு வகைப்படும் 

 4. Asexual reproduction refers to the production of the progeny possessing features more or less similar to those of parents | பாலிலா இனப்பெருக்கத்தின் மூலம் சில அல்லது பல பண்புகளில் பெற்றோரை ஒத்தசந்ததிகள் தோற்றுவிக்கப்படுகின்றன

 5. The sexual reproduction brings out variation through recombination | பாலினப்பெருக்கம், மறுகூட்டிணைவு வாயிலாக வேறுபாடுகளைச் சந்ததிகளில் கொண்டு வருகிறது

 6. Examples of Asexual reproduction | பாலிலா இனப்பெருக்கத்திற்கு உதாரணம்

 • Conidia (Aspergillus, Penicillium) | கொனிடியங்கள் (ஆஸ்பர்ஜில்லஸ்)
 • Budding (Hydra and Yeast) | மொட்டுவிடுதல் (ஹைட்ரா, ஈஸ்ட்)

 • Binary fission (Bacteria and Amoeba) | இரு பிளவுறுதல் (பாக்டீரியங்கள், அமீபா) 

 • Fragmentation (Spirogyra) | துண்டாதல் (ஸ்பைரோகைரா) 

 • Protonema (Mosses) |  புரோட்டோனிமா (மாஸ்கள்)

 • Regeneration (Planaria) | மீளுருவாக்கம் (பிளனேரியா)

 • Irritability | உறுத்துணர்வு

 1. All organisms are capable of sensing their environment and respond to various physical, chemical and biological stimuli this is called Consciousness | உயிரினங்கள் அனைத்தும் அவற்றின் சுற்றுப்புறத்தை நன்கு உணரக்கூடியன இயற்பியல், வேதியியல், உயிரியல் சார்ந்த தூண்டல்களுக்குத் தகுந்த துலங்கள்களை வெளிப்படுத்துகின்றன இதனை உணர்வுநிலை என்கிறோம்

 2. Plants also respond to the stimuli. Bending of plants towards sunlight, the closure of leaves in touch-me-not plant to touch are some examples for response to stimuli in plants |  தாவரங்கள் சூரிய ஒளியை நோக்கி வளைவதும், தொட்டாற்சிணுங்கி தாவர இலைகள் தொட்டவுடன் மூடிக்கொள்வதும், தாவரங்களில் காணப்படும் தூண்டல்களுக்கேற்ற துலங்கல்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும்

 3. This type of response is called Irritability | இவ்வகை துலங்கல்கள் உறுத்துணர்வு என அழைக்கப்படுகின்றன


NEET Botany 2021 
Telegram Channel 


பயிற்சி தேர்வு லிங்க்  (Practice Link)
பயிற்சி பெற்றபின் சான்றிதழ் தேர்வு எழுதவும் .
(பல முறை பயிற்சி தேர்வு எழுதலாம்) 
Tamil
English சான்றிதழ் தேர்வு லிங்க் (Certificate Test) 
ஒரு முறை மட்டும் சான்றிதழ் தேர்வு எழுத முடியும் 
சான்றிதழ் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும் 

Tamil Medium

English Medium

NEET Botany 2021
 Telegram Channel 

மேலும் விவரங்களுக்கு 


மோசஸ் பாக்கியராஜ். A, M.Sc., M.Ed.,
முதுகலை தாவரவியல் ஆசிரியர் 
CSI பெண்கள் மேல்நிலைப்  பள்ளி, மதுரை 
9994720207


Post a Comment

Previous Post Next Post