Coffee with NEET Day 5 [ Bacteria | பாக்டீரியங்கள் ]


Bacteria | பாக்டீரியங்கள் 

 • A little drop of curd turns the milk into curd after some time. What is responsible for this change?

The change is brought by Lactobacillus lactis, a bacterium present in the curd

சிறுதுளி உறைத்தயிர் பாலில் கலந்து சிறிது நேரத்திற்குப் பிறகு தயிராக மாறுகிறது. இம்மாற்றத்திற்கு காரணம் என்ன? 

இம்மாற்றம் லாக்டோபேசில்லஸ் லாக்டிஸ் எனும் தயிரில் காணப்படும் பாக்டீரியத்தால் ஏற்படுகிறது. 


 • Why it Sours?

The sourness is due to the formation of Lactic acid

ஏன் தயிர் புளிக்கிறது ? 

தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் புளிப்புத்தன்மையைத் தருகிறது.


 • Have you been a victim of Typhoid?

It is a bacterial disease caused by Salmonella typhi, a bacterium

டைஃபாய்டு காய்ச்சலுக்கு ஆளாகியுள்ளீர்களா? 

இது சால்மோனெல்லா டைஃபி எனும் பாக்டீரியத்தால் ஏற்படும் நோயாகும். 


 • Bacteria are prokaryotic, unicellular, ubiquitous, microscopic organisms

பாக்டீரியங்கள் தொல்லுட்கரு உயிரி வகையைச் சார்ந்த ஒரு செல் அமைப்புடைய, 

அனைத்து இடங்களிலும் பரவியுள்ள நுண்ணுயிரிகளாகும். 


 • The study of Bacteria is called Bacteriology

பாக்டீரியங்களைப் பற்றி அறியும் பிரிவு 'பாக்டீரிய இயல்' என அறியப்படுகிறது. 


Milestones in Bacteriology | பாக்டீரியயியலின் மைல்கற்கள்


 • 1676 Anton van Leeuwenhoek Bacteria were first discovered and were called “animalcules”.

1676 ஆன்டன் ஃபான் லீவன்ஹுக் பாக்டீரியங்களை முதன்முதலில் நுண்ணோக்கியில் கண்டு, அதனை 'அனிமல்கியூல்ஸ்' (animalcules) என்று அழைத்தார்.


 • 1829 C.G. Ehrenberg coined the term Bacterium 

1829 C.G.எஹ்ரன்பெர்க் பாக்டீரியம் என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தினார் 


 • 1884 Christian Gram introduced Gram staining method

1884 கிறிஸ்டியன் கிராம் கிராம் சாயமேற்றும் முறையை அறிமுகப்படுத்தினார் 


 • 1923 David H. Bergy published First edition of Bergey’s Manual 

1923 டேவிட் H. பெர்ஜி "பெர்ஜி கையேட்டின்" முதல் பதிப்பை வெளியிட்டார்


 • 1928 Fredrick Griffith discovered Bacterial transformation

1928 பிரட்ரிக்கிரிஃபித் பாக்டீரியத்தின் மரபணு மாற்றத்தைக் கண்டறிந்தார் 


 • 1952 Joshua Lederberg discovered of Plasmid

1952 ஜோஸ்வா லெடர்பர்க் பிளாஸ்மிட்டைக் கண்டறிந்தார்


Robert Koch (1843–1910) | ராபர்ட் கோக் (1843-1910)


 • Robert Heinrich Hermann Koch was a German physician and microbiologist

ராபர்ட் ஹின்ரிக் ஹெர்மன் கோக் ஜெர்மனி நாட்டைச் சார்ந்த மருத்துவரும், நுண்ணுயிரியியல் வல்லுநரும் ஆவார். 


 • He is considered as the founder of modern bacteriology.

இவர் அண்மைக்கால பாக்டீரியயியலின் தோற்றுநராகக் கருதப்படுகிறார். 


 • He identified the causal organism for Anthrax, Cholera and Tuberculosis

இவர் கோமாரி நோய், காலரா, காசநோய் போன்றவைகளுக்கான நோய்க்காரணிகளைக் கண்டுபிடித்தார். 


 • The experimental evidence for the concept of infection was proved by him (Koch’s postulates)

தொற்றுதல் எனும் கருத்தை விளக்கி சோதனை அடிப்படையில் நிரூபித்துக் காட்டினார் (கோக்கின் கோட்பாடுகள்). 


 • 1905 He was awarded Nobel prize in Medicine/Physiology

1905 இவருக்கு மருத்துவம் / வாழ்வியல் பிரிவிற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.General characteristic features of Bacteria | பாக்டீரியங்களின் பொதுப்பண்புகள் 


 • They are Prokaryotic organisms and lack nuclear membrane and membrane bound organelles

இவை தொல்லுட்கரு உயிரிகளாகும், உட்கரு சவ்வும், சவ்வினால் சூழப்பட்ட செல் நுண்ணுறுப்புகளும் காணப்படுவதில்லை. 


 • The Genetic material is called nucleoid or genophore or incipient nucleus

மரபணுப் பொருள் உட்கரு ஒத்த அமைப்பு (Nucleoid) அல்லது மரபணுதாங்கி (Genophore) அல்லது தோற்றுவிநிலை உட்கரு (Incipient Nucleus) என்று அறியப்படுகிறது. 


 • The cell wall is made up of Polysaccharides and proteins

செல் சுவர் பாலிசாக்ரைட்கள், புரதங்களால் ஆனது. 


 • Most of them lack chlorophyll, 

பெரும்பான்மையான பாக்டீரியங்களில் பச்சையம் காணப்படுவதில்லை. 


 • Hence they are heterotrophic (Vibrio cholerae) 

எனவே இவை சார்பூட்ட முறையைச் (Heterotrophic) சார்ந்தவையாக உள்ளன. 

(எடுத்துக்காட்டு: விப்ரியோ காலரே). 


 • but some are autotrophic and possess Bacteriochlorophyll (Chromatium)

சில வகையான பாக்டீரியங்களில் பாக்டீரியபச்சைய நிறமிகள் காணப்படுவதால் அவை தற்சார்பு ஊட்டமுறையை (Autotrophic) மேற்கொள்கின்றன 

(எடுத்துக்காட்டு: குரோமேஷியம்). 


 • They reproduce vegetatively by Binary fission and endospore formation

பாக்டீரியங்கள் இருபிளவுறுதல் (Binary fission), அகவித்துகள் (Endospores) உருவாதல் போன்ற முறைகளில் உடல் இனப்பெருக்கம் செய்கின்றன. 


 • They exhibit variations which are due to genetic recombination and is achieved through conjugation, transformation and transduction.

பாக்டீரியங்களில் பாலினப்பெருக்கம் இணைவு, மரபணுமாற்றம், மரபணு ஊடுகடத்தல் போன்ற முறைகளில் நடைபெற்று மறுகூட்டிணைவு (Recombination) நிகழ்ந்து வேறுபாடுகள் அடைகின்றன. 

 


Ultrastructure of a Bacterial cell | பாக்டீரிய செல்லின் நுண்ணமைப்பு 

The bacterial cell reveals three layers 

பாக்டீரிய செல் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. 


 1. Capsule/Glycocalyx | வெளியுறை (Capsule) அல்லது கிளைக்கோகேலிக்ஸ் 

 2. Cell wall and | செல்சுவர் 

 3. Cytoplasm | சைட்டோபிளாசம் Capsule/Glycocalyx | வெளியுறை அல்லதுகிளைக்கோகேலிக்ஸ் 

 • Some bacteria are surrounded by a gelatinous substance which is composed of polysaccharides or polypeptide or both

சில பாக்டீரியங்கள் வழவழப்பான தன்மை கொண்ட பாலிசாக்ரைட்கள் அல்லது பாலிபெப்டைட் அல்லது இரண்டினையும் கொண்ட படலத்தால் சூழப்பட்டுள்ளன. 


 • A thick layer of glycocalyx bound tightly to the cell wall is called capsule

செல்சுவரோடு மிக நெருக்கமாக அமைந்த கிளைக்கோகேலிக்ஸினாலான அடுக்கு வெளியுறை என அழைக்கப்படுகிறது. 


 • It protects cell from desiccation and antibiotics

இவைகள் பாக்டீரியங்களை உலர்தலிலிருந்தும், உயிர் எதிர்பொருட்களிலிருந்து (antibiotic) பாதுகாத்துக் கொள்வதற்கு உதவுகின்றன. 


 • The sticky nature helps them to attach to substrates like plant root surfaces, Human teeth and tissues

வெளியுறையின் ஒட்டும் தன்மை, பாக்டீரியங்களை தாவர வேரின் புறபரப்புகள், மனித பற்கள், திசுக்கள் மீது ஒட்டி வாழவும் உதவுகிறது. 


 • It helps to retain the nutrients in bacterial cell 

மேலும் இந்த அடுக்கு பாக்டீரியசெல் ஊட்டத்தினைத் தக்க வைத்துக்கொள்ளவும் உதவுகிறது.


Cell wall | செல்சுவர்

 • The bacterial cell wall is granular and is rigid

பாக்டீரியங்களின் செல்சுவர் கடினமானது. துகள் ஒத்த (Granular) தன்மை கொண்டது. 


 • It provides protection and gives shape to the cell

இது செல்லிற்கு வடிவத்தையும், பாதுகாப்பையும் அளிக்கிறது. 


 • The chemical composition of cell wall is rather complex and is made up of peptidoglycan or mucopeptide (N-acetyl glucosamine, N-acetyl muramic acid and peptide chain of 4 or 5 aminoacids).

பாக்டீரியங்களின் செல்சுவர் மிகவும் சிக்கலான அமைப்புடையது. இவை பெப்டிடோகிளைக்கான் அல்லது மியூகோபெப்டைட்களால் ஆனது. (N-அசிட்டைல் குளுகோஸமைன், N அசிட்டைல் மியுராமிக் அமிலம், 4 அல்லது 5  அமினோ அமிலங்களைக் கொண்ட பெப்டைட் தொடரால் ஆனது). 


 • One of the most abundant polypeptide called porin is present and it helps in the diffusion of solutes

பாக்டீரியங்களின் செல்சுவரில் போரின் (Porin) பாலிபெப்டைட்கள் மிகுந்து காணப்படுகின்றன. இவை கரைப்பொருட்கள் பரவிச் செல்வதற்கு உதவிபுரிகின்றன. 


Plasma membrane | பிளாஸ்மாசவ்வு 

 • The plasma membrane is made up of lipoprotein.

பிளாஸ்மாசவ்வு லிப்போபுரதத்தால் ஆனது. 


 • It controls the entry and exit of small molecules and ions.

இது சிறிய மூலக்கூறுகள், அயனிகள் உட்செல்வதையும், வெளியேறுவதையும் கட்டுப்படுத்துகிறது. 


 • The enzymes involved in the oxidation of metabolites (i.e., the respiratory chain) as well as the photosystems used in photosynthesis are present in the plasma membrane

சுவாசித்தல் நிகழ்ச்சியில் வளர்சிதை பொருளின் ஆக்ஸிஜனேற்றத்தில் (அதாவது சுவாசநிகழ்வு சங்கிலித்தொடரில்) பங்கு பெறும் நொதிகளும், ஒளிச்சேர்க்கையில் ஈடுபடும் நொதிகளும் பிளாஸ்மாசவ்வில் அமைந்துள்ளன.


Cytoplasm | சைட்டோபிளாசம்

 • Cytoplasm is thick and semitransparent.

சைட்டோபிளாசம் அடர்த்தியானது. பகுதி ஒளிகடத்தும் தன்மையுடையது. 

 • It contains ribosomes and other cell inclusions

இதில் ரிபோசோம்களும் இதர செல் உள்ளடக்கப் பொருட்களும் (inclusions) காணப்படுகின்றன. 


 • Cytoplasmic inclusions like glycogen, poly-β- hydroxybutyrate granules, sulphur granules and gas vesicles are present

சைட்டோபிளாசத்தில் உட்பொருட்களாக கிளைக்கோஜன் , பாலி - B - ஹைட்ராக்ஸி பியுட்ரேட் துகள்கள், கந்தக துகள்கள், வளிம குமிழ்கள் (gas vesicles) போன்றவை காணப்படுகின்றன.


Bacterial chromos | பாக்டீரியங்களின் குரோமோசோம்

 • The bacterial chromosome is a single circular DNA molecule, tightly coiled and is not nclosed in a membrane as in Eukaryotes

பாக்டீரிய குரோமோசோம் வட்டவடிவ, இறுக்கமாக சுருண்ட DNA மூலக்கூறு ஆகும். 

இது மெய்யுட்கரு உயிரியில் உள்ளது போல சவ்வினால் சூழப்பட்டு காணப்படுவதில்லை.

 

 • This genetic material is called Nucleoid or Genophore

இம்மரபியல் பொருள் உட்கரு ஒத்த அமைப்பு (Nucleoid) அல்லது மரபணுதாங்கி (Genophore) என்று அழைக்கப்படுகிறது. 


 • It is amazing to note that the DNA of E.coli which measures about 1mm long when uncoiled, contains all the genetic information of the organism

சுருளற்ற நிலையில் ஈகோலையின் DNA 1mm நீளமுடையதாக இருந்தாலும், அவ்வுயிரினத்திற்குத் தேவையான அனைத்து மரபியல் தகவல்களையும் உள்ளடக்கியுள்ளது. 


 • The DNA is not bound to histone proteins

DNA ஹிஸ்டோன் புரதத்துடன் இணைந்து காணப்படுவதில்லை. 


 • The single chromosome or the DNA molecule is circular and at one point it is attached to the plasma membrane and it is believed that this attachment may help in the separation of two chromosomes after DNA replication

தனிகுரோமோசோம் அல்லது வட்டவடிவிலுள்ள DNA மூலக்கூறின் ஒருமுனை பிளாஸ்மா சவ்வின் ஒரு பகுதியுடன் ஒட்டியிருப்பது DNA இரட்டிப்படைதலின்போது குரோமோசோம்களாகப் பிரிவதற்கு உதவி புரிகிறது என நம்பப்படுகிறது.

 

Plasmid | பிளாஸ்மிட்

 • Plasmids are extra chromosomal double stranded, circular, self-replicating, autonomous elements

இரு பாக்டீரியங்களில் காணக்கூடிய ஈரிழைகளாலான, வட்ட வடிவ, சுயமாக பெருக்கமடையும் தன்மை கொண்ட கூடுதல் குரோமோசோம்கள் பிளாஸ்மிட்கள் என்று அழைக்கப்படுகின்றன. 


 • They contain genes for fertility, antibiotic resistant and heavy metals

இவை வளத்தன்மை, உயிர் எதிர்ப்பொருள் எதிர்ப்புத்தன்மை, வன்உலோகங்களைத் தாங்கும் தன்மை ஆகியவற்றிற்கான மரபணுக்களைப் பெற்றுள்ளன. 


 • It also help in the production of bacteriocins and toxins which are not found in bacterial chromosome

பாக்டீரியத்தின் குரோமோசோமில் காணப்படாத பாக்டீரியோசின் (Bacteriocin) மற்றும் நச்சுக்களையும் பிளாஸ்மிட்கள் உற்பத்தி செய்கின்றன. 


 • The size of a plasmid varies from 1 to 500 kb usually plasmids contribute to about 0.5 to 5.0% of the total DNA of bacteria

பிளாஸ்மிட்கள் 1-லிருந்து 500 கிலோ அடியிணைகள் (Kilobase) வரையிலான அளவுகளில் வேறுபடுகின்றன. பாக்டீரியங்களில் காணப்படும் மொத்த DNAவில் பிளாஸ்மிட்கள் 0.5% முதல் 5.0% வரை உள்ளன. 


 • The number of plasmids per cell varies 

 • பாக்டீரியங்களின் செல்களில் காணப்படும் பிளாஸ்மிட்களின் எண்ணிக்கை வேறுபடுகிறது


 • Plasmids are classified into different types based on the function

பிளாஸ்மிட்கள் அவற்றின் செயல்பாடுகளின் அடிப்படையில் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன. 


 • Some of them are F (Fertility) factor, R ( Resistance) plasmids, Col (Colicin) plasmids, Ri (Root inducing)

plasmids and Ti (Tumour inducing) plasmids

F (வளத்தன்மை) காரணி , R (எதிர்ப்புத்தன்மை) பிளாஸ்மிட்கள், Col (கோலிசின்) பிளாஸ்மிட்கள், Ri (வேரினைத் தூண்டும்) பிளாஸ்மிட்கள், Ti (கழலையைத் தூண்டும்) பிளாஸ்மிட்கள்.


Mesosomes | மீசோசோம்கள்

 • These are localized infoldings of plasma membrane produced into the cell in the form of vesicles, tubules and lamellae

பிளாஸ்மாசவ்வு குறிப்பிட்ட சில இடங்களில் குமிழ்கள், சிறு குழல்கள், மென் அடுக்குகள் போன்ற வடிவங்களில் செல்லில் உள்நோக்கி சில மடிப்புகளை தோற்றுவிக்கின்றன. 


 • They are clumped and folded together to maximize their surface area and helps in respiration and in binary fission

இவை ஒன்றாக திரண்டு மடிப்புகளை ஏற்படுத்தி தளப்பரப்பை அதிகரிக்கச் செய்து சுவாசித்தலுக்கும், இரு பிளவுறுதலுக்கும் உதவி செய்கின்றன. 


Polysomes / Polyribosomes  | பாலிசோம்கள் அல்லது பாலிரிபோசோம்கள் 


 • The ribosomes are the site of protein synthesis

ரிபோசோம்கள் புரதச்சேர்க்கை நடைபெறும் மையங்களாகும். 


 • The number of ribosome per cell varies from 10,000 to 15,000

ஒரு செல்லில் ரிபோசோம் எண்ணிக்கை 10,000 முதல் 15,000 வரை வேறுபடுகிறது. 


 • The ribosomes are 70S type and consists of two subunits (50S and 30S)

ரிபோசோம்கள் 70S வகையை சார்ந்தது. இவைகள் இரண்டு துணை அலகுகளைப் பெற்றுள்ளன (50S மற்றும் 30S). 


 • The ribosomes are held together by mRNA and form polyribosomes or polysomes

ஏவல் RNA (mRNA) இழையின் மீது பல ரிபோசோம்கள் ஒன்று சேர்ந்து காணப்படுவது பாலிரிபோசோம்கள் அல்லது பாலிசோம்கள் எனப்படும். 


Flagella | கசையிழை 


 • Certain motile bacteria have numerous thin hair like projections of variable length emerge from the cell wall called flagella

இடப்பெயர்ச்சி அடையும் சில பாக்டீரியங்களின் செல்சுவரிலிருந்து தோன்றுகின்ற வேறுபட்ட நீளமுடைய எண்ணற்ற மெல்லிய மயிரிழை போன்ற அமைப்புகள் கசையிழைகள் என அழைக்கப்படுகின்றன. 


 • It is 20–30 μm in diameter and 15 μm in length.

இவை 20 - 30um விட்டமும், 15um நீளமும் உடையவை. 


 • The flagella of Eukaryotic cells contain 9+2 microtubles 

மெய்யுட்கரு செல்களில் கசையிழைகள் 9 + 2 என்ற அமைப்பில் அமைந்த நுண்ணிழைகளால் ஆனவை. 


 • but each flagellum in bacteria is made up of a single fibril

ஆனால் பாக்டீரியங்களில் ஒவ்வொரு கசையிழையும் ஒரே ஒரு நுண்ணிழையால் மட்டுமே ஆனது. 


 • Flagella are used for locomotion

கசையிழைகள் இடப்பெயர்ச்சிக்கு உதவுகின்றன. 


 • Based on the number and position of flagella there are different types of bacteria

கசையிழைகளின் எண்ணிக்கை மற்றும் அமைவிடத்தின் அடிப்படையில் பல்வேறு வகையான பாக்டீரியங்கள் உள்ளன . 


Fimbriae or Pili | ஃபிம்ரியெ அல்லது நுண் சிலும்புகள்


 • Pili or fimbriae are hair like appendages found on surface of cell wall of gram-negative bacteria (Example: Enterobacterium).

கிராம் எதிர் பாக்டீரியங்களின் (எடுத்துக்காட்டு: எண்டிரோபாக்டீரியம்)

செல்சுவரின் மேற்புறத்தில் மயிரிழை போன்ற நீட்சிகள் காணப்படுகின்றன. 

இவை நுண் சிலும்புகள் அல்லது ஃபிம்ரியெ எனப்படும். 


 • The pili are 0.2 to 20 μm long with a diameter of about 0.025μm

இவை 0.2 முதல் 20 um நீளத்தையும் 0.025 um விட்டத்தையும் உடையன


 • In addition to normal pili there are special type of pili which help in conjugation called sex pili are also found

இயல்பான நுண்சிலும்புகளைத் தவிர பாக்டீரியங்களின் இணைவிற்கு உதவி செய்யும் சிறப்புவகையான பாலியல் நுண்சிலும்புகளும் (Sex pili) காணப்படுகின்றன.


Bacteria Structure 

NEET Botany 2021 Tamil 
Telegram Channel 


பயிற்சி தேர்வு லிங்க்  (Practice Link)
பயிற்சி பெற்றபின் சான்றிதழ் தேர்வு எழுதவும் .
(பல முறை பயிற்சி தேர்வு எழுதலாம்) 
Tamil
English சான்றிதழ் தேர்வு லிங்க் (Certificate Test) 
ஒரு முறை மட்டும் சான்றிதழ் தேர்வு எழுத முடியும் 
சான்றிதழ் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும் 

Tamil Medium

English Medium

NEET Botany 2021 Tamil
 Telegram Channel 

மேலும் விவரங்களுக்கு 


மோசஸ் பாக்கியராஜ். A, M.Sc., M.Ed.,
முதுகலை தாவரவியல் ஆசிரியர் 
CSI பெண்கள் மேல்நிலைப்  பள்ளி, மதுரை 
9994720207

Post a Comment

Previous Post Next Post