45 Days only for NEET 2021

 Lesson 12. Mineral nutrition (Tamil / English )

பாடம் 12. கனிம ஊட்டம்

1. நீர் ஊடக வளர்ப்பு அல்லது மண்ணில்லா வளர்ப்பு. 
கனிம ஊட்ட கரைசலில் தாவரங்களை வளர்க்கும் முறையினை  வான் சாக்ஸ் உருவாக்கினார். 
இதற்குரிய கனிம ஊட்டச் சத்து கரைசல்கள் முறையே நாப்ஸ் கரைசல் (1865), ஆர்னான்  மற்றும் ஹாக்லேண்டு கரைசல் ஆகியவை ஆகும். 
கோயெரிக் (1940) என்பவர் ஹைட்ரோபோனிக்ஸ் என்ற சொல்லை அறிமுகப்படுத்தினார். வணிக ரீதியான ஹைட்ரோபோனிக்ஸ் தொழில் நுட்பங்களை உருவாக்கியவரும் இவரே. 

2. காற்றூடக வளர்ப்பு. 
இந்தத் தொழில் நுட்பத்தை உருவாக்கியவர்கள் சோஃபர் ஹில்லல் மற்றும் டேவிட் டர்ஜர்.
இம்முறையில் வேரானது ஊட்டச்சத்து திரவத்திற்கு மேலே காற்றில் மிதந்தபடி இருக்குமாறு தாவரங்கள் பொருத்தப்பட்டிருக்கும். அத்துடன் ஊட்டச்சத்து திரவம் சுழலும் மோட்டாரின் உதவியோடு வேர்கள் மீது தெளிக்கப்படுகிறது. 

3. இன்றியமையாக் கனிமங்களைத் தீர்மானிப்பதற்கான அளவுகோல். 
ஆர்னான் மற்றும் ஸ்டவுட் (1939). 
- தாவரங்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு அவசியமான கூறுகளாக இருத்தல் வேண்டும். 
- தாவரங்களின் வளர்சிதை மாற்றத்தில் நேரடியாகப் பங்காற்ற வேண்டும். 
- ஒரு தனிமத்தின் பற்றாக்குறையை மற்றொன்று பதீலிடு செய்வதாக இருத்தல் கூடாது. 
- இதன் குறைபாடு தாவரத்தின் உடல மற்றும் இனப்பெருக்க நிலை முழுமை பெறுவதைப் பாதிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். 

4. பெரும் ஊட்ட மூலங்கள். 
திசு செறிவில் 10மி.மோல் kg -1 க்கு அதிகமாகவோ அல்லது ஒரு கிராம் உலர் எடையில் 0.1 முதல் 10மி.கிராம் அளவில் தேவைப்படுதல்.
எ. கா. C, H, O, N, P, K, Ca, Mg மற்றும் S. 
நுண் ஊட்ட மூலங்கள். 
திசு செறிவில் 10 மி. மோல் kg -1 க்கு குறைவாகவும் அல்லது ஒரு கிராம் உலர் எடையில் 0.1மி.கிராமிற்குக் குறைவான அளவில் தேவைப்படுதல்.
எ. கா. Fe, Mn, Cu, Mo, Zn, B, Cl மற்றும் Ni. 

5. சில பெருமூலங்களின் பற்றாக்குறை அறிகுறிகள். 
கேம்பிய செயல்பாட்டின் ஒடுக்கம்- பாஸ்பரஸ்.
முனை ஆதிக்கப் பாதிப்பு- பொட்டாசியம்
செலரியில் மையக் கருக்கல் நோய்- கால்சியம்
சர்க்கரை வள்ளி கிழங்கு இலை நுனி கொக்கி போல் வளைதல்- கால்சியம். 

6. சில நுண் ஊட்ட மூலங்களின் பற்றாக்குறை அறிகுறிகள். 
சிட்ரஸ் தாவரத்தில் தண்டு நுனியடி இறப்பு- தாமிரம்
சிட்ரஸ் தாவரத்தில் எக்சாந்தீமா நோய்- தாமிரம்
நெல்லின் கெய்ரா நோய்- துத்தநாகம்
பீட்ருட்டின் பழுப்பு மையக் கருக்கல் நோய்- போரான்
காலிஃபிளவரில் சாட்டை வால் நோய்- மாலிப்டினம். 

7. தீர்வுக்கட்ட செறிவு. 
தீர்வுக்கட்ட செறிவைக் குறைவான அளவு கனிமங்களின் செறிவு உள்ள போது பற்றாக்குறை அறிகுறிகளையும், இதைவிடச் செறிவு அதிகரிக்கும் போது நச்சுதன்மையையும் ஏற்படுத்துகிறது. 
ஒரு குறிப்பிட்ட தனிமச் செறிவின் போது, தாவரத்தின் உலர் எடையில் 10%திசு இழப்பு ஏற்பட்டால், அது நச்சு தன்மை அளவு எனக் கருதப்படுகிறது. 

8. கனிமங்களின் நச்சுத்தன்மை. 
மாங்கனீசு நச்சுத்தன்மை- மாங்கனீசு செறிவு அதிகரிக்கும் போது இரும்பு மற்றும் மெக்னீசியத்தை எடுத்துக்கொள்ளும் திறனைத் தடுக்கிறது. மேலும் கால்சியம் தண்டின் நுனிப்பகுதிக்குக் கடத்தப்படுவதையும் தடுக்கிறது. 
அலுமினியம் நச்சுத்தன்மை. 
அலுமினியத்தின் நச்சுத்தன்மை காரணமாக நியூக்ளிக் அமிலமானது வீழ்படிகிறது. ATP யேஸ் நொதியின் செயல்பாடு தடை படுகிறது. செல் பகுப்பை தடை செய்தல் மற்றும் பிளாஸ்மா சவ்வுடன் கால்மோடுலின் பிணைவதைத் தடுக்கிறது. 

9. லெக் ஹீமோகுளோபின். 
வளிமண்டல நைட்ரஜன் நிலைநிறுத்தலில், காற்றில்லா நிலையை ஏற்படுத்த வேர்முடிச்சுகளில் உருவாகும். 
இந்த லெக் ஹீமோகுளோபின் ஆக்ஸிஜன் நீக்கியாக செயல்பட்டு ஆக்ஸிஜன் இல்லாச் சூழலை ஏற்படுத்துகிறது. 
நைட்ரஜன் நிலைநிறுத்தும் பாக்டீரியாக்கள் வேர்முடிச்சுகளில் இளஞ்சிவப்பு நிறத்துடன் காணப்படுவதற்கு நிறமியே காரணமாக உள்ளது. 

10. நைட்ரேட்டாதல். 
அம்மோனியாவானது முதலில் நைட்ரோசோமோனாஸ் பாக்டீரியத்தின் உதவியால் நைட்ரேட்டாக மாற்றம் அடைகிறது. 
பின்னர் இது நைட்ரேட்டாக நைட்ரோபாக்டர் என்ற பாக்டீரியத்தினால் மாற்றம் அடைகிறது. 
அமைனோ மாற்றம். 
குளுட்டாமிக் அமிலத்திலுள்ள அமினோ தொகுதியானது பிற கீட்டோ அமிலத்தின் கீட்டோ தொகுதிக்கு மாற்றப்படும் நிகழ்ச்சி. 
குளுட்டாமிக் அமிலமானது முதன்மையான அமினோ அமிலமாகச் செயல்பட்டுப் பிற கீட்டோ அமிலங்களை அமினோ அமிலங்களாக அமைனோ மாற்றம் மூலம் மாற்றுகிறது. 
இந்நிகழ்விற்கு டிரான்ஸ் அமினேஸ் நொதி மற்றும் பைரிடாக்ஸல் பாஸ்பேட் என்ற துணை நொதி (வைட்டமின் B6 பைரிடாக்ஸின் வழித்தோன்றல்) ஆகியவை தேவைப்படுகின்றன. 

கலைச்சொல் அகராதி. 
1. இணைவு காரணிகள். 
கரிம பிணைப்பு காரணிகளின் சில அணுக்கள் எலக்ட்ரான்களை எதிர்மின் அயனிகளுக்கு வழங்குவதால் உருவாகும், நீரில் கரையக்கூடிய இணைக்கும் பொருட்கள். 
2. பச்சைய சோகை. 
பச்சையம் சிதைவடைதல் மற்றும் உற்பத்தி பாதிப்பினால் இலைகள் மஞ்சள் நிற மாதல். 
3. இணை நொதி. 
நொதி ஊக்குவிக்கும் வினைகளில் பங்கேற்கும் ஒரு புரதமல்லாத மூலக்கூறு, பல்வேறு மூலக்கூறுகளுக்கு இடையே புரோட்டான்கள் அல்லது எலக்ட்ரான்களை பரிமாற உதவுகிறது. 
4. அமினோ நீக்கம். 
ஒரு அமினோ அமிலத்திலிருந்து நொதிகளின் மூலம் ஒரு அமினோ தொகுதி அதன் தொடர்புடைய கீட்டோ அமிலத்தை நீக்குவது. 
5. எத்திலின் டை அமீன்  டெட்ரா அசிட்டிக் அமிலம். 
காரத்தன்மை உடைய மண்ணில் இரும்பு சத்தினை நீரில் கரையக்கூடிய பொருளாக மாற்றும் இணைவுக்காரணி. 
6. திசு நசிவு. 
திசுக்களின் இறப்பு.


Technical points 
1. Hydroponics or soilless culture. 
Von Sachs develpoed a method of growing plants in nutrient solution. 
The commonly used nutrient solutions are knop solution (1865) and Arnon and Hoagland solution (1940). 
Later term hydroponics was coined by Goerick (1940) and he also introduced commercial techniques for hydroponics. 

2. Aeroponics. 
This technique was developed by Soifer Hillel and David Durger. 
It is a system where roots are suspended in air and nutrients are sprayed over the roots by a motor driven rotor.
3. Criteria for essential minerals. 

Arnon and stout (1939) 
- Elements necessary for growth and development. 
- They should have direct role in the metabolism of the plant. 
- It cannot be replaced by other elements. 
- Deficiency makes the plants impossible to complete their vegetative and reproductive phase. 

4. Macronutrients. 
Excess than 10mmole Kg-1 in tissue concentration or 0.1 to 10mg per gram of dry weight. 
Example- C,H, O, N, P, K, Ca, Mg and S. 
Micronutrients. 
Less than 10mmole Kg-1 in tissue concentration or equal or less than 0.1 mg per gram of dry weight. 
Example. Fe, Mn, Cu, Mo, Zn, B, Cl and Ni. 

5. Some important deficiency symptoms of macronutrients. 
Inhibition of cambial activity- phosphorus
Loss of apical dominance- potassium
Black heart of Celery- calcium
Hooked leaf tip in sugar beet- calcium

6. Some important deficiency symptoms of micronutrients. 
Die back of citrus- copper
Exanthema in citrus- copper
Khaira disease of rice- Zinc
Brown heart of beet root- boron
Whip tail disease of cauliflower- molybdenum.

7. Critical concentration. 
Increase of mineral nutrients more than the normal concentration causes toxicity. 
A concentration, at which 10% of the dry weight of tissue is reduced, is considered as toxic.
 
8. Mineral toxicity. 
Manganese toxicity- increased concentration of manganese will prevent the uptake of Fe and Mg, prevent translocation of Ca to the shoot apex and cause their deficiency. 
Aluminium toxicity- causes precipitation of nucleic acid, inhibition of ATPase, inhibition of cell division and binding of plasma membrane and Calmodulin. 

9. Leghaemoglobin. 
In fixation of atmospheric nitrogen, anaerobic condition a pigment. It synthesized in the nodules which acts as oxygen scavenger and removes the oxygen. 
Nitrogen fixing bacteria in root nodules appears pinkish due to the presence of this leghaemoglobin pigment. 

10. Nitrification- Ammonia is converted into nitrite by nitrosomonas bacterium. 
Nitrite is then converted into nitrate by nitrobacter bacterium. 
Transamination- transfer of amino group from glutamic acid glutamate to keto group of keto acid. 
Glutamic acid is the main amino acid from which other amino acids are synthesised by transamination. 
Transamination requires the enzyme transaminase and co enzyme pyridoxal phosphate(derivative of vitamin B6 pyridoxine). 

Glossary. 
1. Chelating agents. 
A chelate is the soluble product formed when certain atoms in an organic ligand donate electrons to the cation. 
2. Chlorosis. 
Breakdown of chlorophylls leads to yellowing of leaves. 
3. Co enzyme. 
A non protein molecule involved in enzyme catalyzed reactions serves as transfer of protons or electrons between various molecules. 
4. Deamination. 
The enzymatic removal of an amino group from an amino acid form it's corresponding keto acid. 
5. EDTA. 
Ethylene Diamine Tetra Acetic acid, chelating agent makes iron uptake possible by forming soluble complex in an alkaline soil. 
6. Necrosis. 
Death of tissue.

Dr. A. KINGSLIN M.Sc, BEd, Phd

Post Graduate Teacher in Botany

Post a Comment

Previous Post Next Post