48 Days only for NEET 2021

 
Lesson 10- Cell cycle and Cell division (Tamil / English )

பாடம் 10.   செல் சுழற்சி மற்றும் செல் பகுப்பு

1. செல் சுழற்சி. 
புதிய செல்லை உருவாக்கும் தொடர்ச்சியான நிகழ்வு. 
இது தொடர்ச்சியான நிகழ்வு பல நிலைகளைக் கொண்டுள்ளது. 
பிரிவோஸ்ட் மற்றும் டுமன்ஸ் இதனை கண்டுபிடித்தனர். 
யூகேரியோட்டிக் செல்லானது 24 மணி நேரத்திற்கு ஒருமுறை பகுப்படைகிறது. 
G1, S, G2 மற்றும் M நிலை.

2. Go நிலை அல்லது  அமைதி நிலை. 
சில செல்கள் G1 நிலையிலிருந்து விடுபட்டு அமைதி நிலைக்கு  செல்கின்றன. இச்செல்கள் நீண்ட காலம் செல் பெருக்கமடையாமல் இருந்து வளர்சிதை மாற்றத்தை மட்டுமே செய்கின்றன. 
இந்நிலையில் உள்ள செல்கள் RNA மற்றும் புரதச் சேர்க்கை செயல்களைக் குறைந்த அளவில் செய்வதுடன் வளர்ச்சியற்ற நிலையில் உள்ளன. 

3. C அளவு. 
ஹாப்லாய்டு உட்கருவில் காணப்படும் DNA அளவைக் குறிக்கிறது. இது பிக்கோகிராமில் கொடுக்கப்படுகிறது. 

4. மைட்டாசிஸ்.
செல் பகுப்பின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக உட்கரு நிகழ்வுகள் உள்ளன. இவற்றில் மைட்டாசிஸ் உட்கரு பகுப்பு, தண்டு, நுனி, வேர் நுனி, தாவரத்தின் பிற வளர் உறுப்புகளின் ஆக்குத் திசுக்களில் நடைபெறுகிறது. 
தாய் செல்லின் குரோமோசோம் எண்ணிக்கையை ஒத்திருப்பதால் இதற்குச் சமநிலை பகுப்பு என்று பெயர். 

5. மெட்டா ஃபேஸ் தட்டு. 
மெட்டாஃபேஸ் நிலையில், கதிர்கோல் இழைகள் டியூபியூலின் புரதத்தால் ஆனவை. செல்லின் மையத் தளத்தில் குரோமோசோம்கள் நெருக்கமாக அமைவதால் உண்டாகும் அமைப்பு. 
இந்நிலையில் குரோமோசோமின் புற அமைப்பு நன்கு புலப்படுகிறது.

6. APC/C.
அனாபேஸ் நிலையில், இந்த திரள் புரதம் ஒட்டிணைவு புரதங்களைச் சிதைக்கத் தூண்டிக் கதிர்கோல் இழைகளைச் சுருங்கச் செய்கிறது. 
எனவே தான் குரோமாட்டின்களானது செல் பகுப்பில் இரு துருவங்களை நோக்கி நகர முடிகிறது. 
எனவே செல் மெட்டாஃபேஸ் நிலையிலிருந்து அனாபேஸ் நிலைக்கு முன்னேறுவதற்கு உதவுகிறது. 

7. சினாப்டினிமல் தொகுப்பு. 
சைக்கோட்டின் நிலையில், ஒத்திசைவு குரோமோசோம்கள் இத்துணை நிலையில் இணை சேர்கின்றன. இதற்குச் சினாப்சிஸ் என்று பெயர். 
இந்த சினாப்சிஸ் நிகழ்வு சினாப்டினிமல் தொகுப்பின் உதவியால் ஏற்படுகிறது. 
இதனால் தோன்றும் இணை குரோமோசோம்களின் தொகுப்பிற்கு பைவாலண்ட் என்று பெயர். 
இதில் இரு குரோமோசோம்களின் நான்கு குரோமாட்டிட்கள் தொகுதியடைவதால் இது நான்கமை எனப்படுகிறது. 
டிப்லோட்டீன் நிலையில், சினாப்டினிமல் தொகுப்பு கலைந்து கரையத் தொடங்குகிறது. 

8. கயாஸ்மாக்கள். 
டிப்லோட்டீன் நிலையில், குறுக்கெதிர் மாற்றம் நடந்து, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகளில் ஒத்திசைவு குரோமோசோம்கள் பிணைந்த நிலையிலேயே உள்ளன. 
இவ்வடுக்கில் X வடிவ அமைப்பிற்கு கயாஸ்மாக்கள் எனப்படுகின்றன. 
குரோமோசோம்களில் மீள் சேர்க்கை நிகழ்ந்த இலக்கை இந்த கயாஸ்மாக்கள் குறிக்கின்றன. 

9. மைட்டாஜன். 
செல் சுழற்சியை தூண்டி பெருக்கமடைய செய்கிறது. 
ஜிப்பரலின், எத்திலீன், இண்டோல் அசிடிக் அமிலம், கைனட்டின் போன்ற தாவர மைட்டாஜன்களாகும். 
மைட்டாஸின் விகிதத்தை கூட்டுகிறது. 


கலைச்சொல் அகராதி.
1. அடிப்பகுதி. 
இது சீலியா மற்றும் கசையிழையின் அடிப்பகுதி. இங்கு நுண் இழைகள் ஆக்சோனிமை தோற்றுவிக்கின்றன. 

2. உட்கரு இணைவு. 
உடகருக்களின் இணைவு. 

3. ஒற்றைக்குழியுடைய மகரந்தத்துகள்.
மகரந்தத்துகள் மீது காணப்படும் ஒற்றைத்துளை அல்லது ஒற்றைக்குழியாகும். 

4. கல்லாதல்.
இறந்த உடலின் பகுதிகளில் தொடர்ந்து தனிமங்களின் ஊடுருவலால் கல்லாக்கப்பட்டு தொல்லுயிர் எச்சங்கள் தோன்றும் முறை. 

5. ஃபாஜ் முன்னோடி. 
ஒம்புயிரி DNA உடன் ஒருங்கிணைந்த ஃபாஜ் DNA. 

6. முக்குழியுடைய மகரந்தம். 
மகரந்தத் துகள்களின் மீது காணப்படும் முக்குழிகள் அல்லது மூன்று பள்ளங்கள். 

7. Xகதிர் படிக வரைகலை. 
X கதிர்களை பெரு மூலக்கூறுகளில் (குறிப்பாக புரதங்கள் மற்றும் நியூக்ளிக் அமிலங்கள்) ஊடுருவச் செய்து அதன் முப்பரிமாண அமைப்பை காட்டும் தொழில்நுட்பம்.

Technical points 
1. Cell cycle. 
A series of events leading to the formation of new cell. The phenomenon changes leading to formation of new population take place in the cell cycle. 
It was discovered by Prevost and Dumans. 
Eukaryotic cell divides every 24 hours. 
G1, S, G2 and M phase. 

2. G0 phase or quiescent stage. 
Some cells exist G1 and enters a quiescent stage called Go where the cells remain metabolically active without proliferation. 
Growth reduced rate of RNA and protein synthesis. 

3. C value. 
Is the amount of picograms of DNA contained within a haploid nucleus. 

4. Mitosis. 
Mitosis occurs in shoot and root tips and other meristematic tissues of plants associated with growth. 
The number of chromosomes in the parent and the daughter cells remain the same so it is also called as equational division. 

5. Metaphase plate. 
In metaphase stage, the alignment of chromosome into compact group at the equator of the cell. 
This is the stage where the chromosome morphology can be easily studied. 

6. APC/C.
In anaphase, a ubiquitine ligase is activated called as the anaphase - promoting complex cyclosome leads to degradation of the key regulatory proteins at the transition of metaphase to anaphase. 
APC is a cluster of proteins that includes the breaking down of cohesion proteins which leads to the separation of chromatids during mitosis. 

7. Synaptonemal complex. 
In zygotene stage, pairing of homologous chromosomes takes place and it is known as synapsis. 
Chromosome synapsis is made by the formation of synaptonemal complex. 
The complex formed by the homologous chromosomes are called as bivalent (tetrads). 
In Diplotene stage, synaptonemal complex disassembled and dissolves. 

8. Chiasmata. 
In diplotene stage, the homologous chromosomes remain attached at one or more points where crossing over has taken place.
These points of attachment where X shaped   structures occur at the sites of crossing over. 
Chiasmata are chromatin structures at sites where recombination has been taken place. 

9. Mitogens. 
The factors which promote cell cycle proliferation. 
Plant mitogens include gibberellin, ethylene, indole acetic acid, kinetin. 
These increase mitotic rate. 

10. Anastral. 
This is present only in plant cells. No asters or centrioles are formed only spindle fibres are formed during cell division. 
Amphiastral- Aster and centrioles are formed at each pole of the spindle during cell division. 
This is found in animal cells. 

Glossary. 
1. Basal body. 
Structure at the base of cilia and flagella from which microtubules forming the axoneme radiate. 

2. Karyogamy. 
Fusion of nucleus. 

3. Monosulcate. 
Pollen grain with single furrow or pores. 

4. Petrifaction. 
A process of fossil formation through infiltration of minerals over a long period. 

5. Prophage. 
The integrated phage DNA with host DNA. 

6. Triplicate. 
Pollen grain with three furrows or pores. 

7. X Ray crystallography. 
Most commonly used technique for determining the three dimensional structure of macromolecules (particularly proteins and nucleic acids) by passing X rays.

Dr. A. KINGSLIN M.Sc, BEd, Phd

Post Graduate Teacher in Botany

Post a Comment

Previous Post Next Post