53 Days only for NEET 2021

 

Lesson 5- Morphology of flowering plants  part 2 (Tamil / English )

பாடம் 5. பூக்கும் தாவரங்களின் புற அமைப்பியல் பாகம் 2

1. இதழமைவு. 
புல்லி இதழ்களும் அல்லி இதழ்களும், மலரின் மொட்டில் அமைந்திருக்கும் முறை. 
தொடு இதழமைவு- புல்லி இதழ் அல்லது அல்லி இதழ்களின் விளிம்புகள் ஒன்றை ஒன்று தழுவாமல் தொட்டுக் கொண்டிருக்கும். எ. கா. கலோடிரோபிஸ். 
திருகு இதழமைவு- ஒவ்வொரு புல்லி அல்லது அல்லி இதழின் ஒரு விளிம்பு மற்றொரு இதழின் விளிம்பைத் தழுவிக் கொண்டிருக்கும். எ. கா. செம்பருத்தி, வெண்டை, பருத்தி. 
அடுக்கு இதழமைவு- புல்லி இதழ்கள் மற்றும் அல்லி இதழ்கள் ஒழுங்கற்று ஒன்றையொன்று தழுவிக் கொண்டிருக்கும். இதழ் வட்டத்தின் ஒரு இதழ் வெளியேயும், ஒரு இதழ் உள்ளேயும் மற்ற மூன்று இதழ்களின் ஒரு விளிம்பு வெளிப்புறமும் மற்றொரு விளிம்பு உட்புறமும் காணப்படும். எ. கா. கேசியா, குல்மோஹர். 
வெக்ஸில்லரி இதழமைவு- மேல் பக்கத்தில் அமைந்த பெரிய அல்லி இதழின்( vexillum) இரு விளிம்புகளும் பக்கவாட்டில் உள்ள இதழ்களைத் தழுவிக் கொண்டிருக்கும். பக்கவாட்டு அல்லி இதழ்களின் (alae)மற்றொரு விளிம்பு கீழ் பக்கத்தில் உள்ள அல்லி இதழ்களைத் (keel Or carina) தழுவிக் கொண்டிருக்கும். 
எ. கா. பட்டாணி, அவரை. 

2. மகரந்தத்தாள் வட்டம். 
மலட்டு மகரந்தத்தாள்கள்- இனப்பெருக்க தன்மையற்ற மகரந்தத்தாள்கள். 
அல்லி ஒட்டியவை- மகரந்தத்தாள்கள் அல்லி இதழ்களுடன் ஒட்டிக் காணப்படும். எ. கா. கத்தரி. 
பூவிதழ் ஒட்டியவை- மகரந்தத்தாள்கள் பூவிதழ்களுடன் ஒட்டிக் காணப்படும். எ. கா. அஸ்பாரகஸ். 
ஒரு கற்றை மகரந்தத்தாள்கள்- மகரந்தத் தாள்களின் அனைத்து மகரந்தக் கம்பிகளும் ஒரு கற்றை யாகச் சேர்ந்திருக்கும். எ. கா. செம்பருத்தி. 
இரு கற்றை மகரந்தத்தாள்கள்- மகரந்தத்தாள்களின் மகரந்தக் கம்பிகள் சேர்ந்து இருகற்றைகளாகக் காணப்படும். எ. கா. பட்டாணி. 
பல கற்றை மகரந்தத்தாள்கள்- மகரந்தக் கம்பிகள் சேர்ந்து பல கற்றை களாக இணைந்து இருக்கும். எ. கா. சிட்ரஸ். 

3. சூல் ஒட்டு முறை. 
சூலகப்பையில் சூல் ஒட்டுத் திசு அமைந்திருக்கும் விதம். 
விளிம்பு சூல் ஒட்டு முறை- ஒற்றைச் சூலகத்தின் விளிம்பில் காணப்படும் சூல் ஒட்டுத் திசுவில் சூல்கள் ஒட்டியிருக்கும். எ. கா. பட்டாணி. 
அச்சு சூல் ஒட்டுமுறை- சூல் ஒட்டுத்திசுவானது குறுக்குச்சுவருடைய பல சூலிலையுடைய இணைந்த சூலகப்பையின் மைய அச்சிலிருந்து தோன்றும். 
எ. கா. செம்பருத்தி, தக்காளி, எலுமிச்சை. 
சுவர் சூல் ஒட்டுமுறை- ஒரறை கொண்ட பல சூலிலையுடைய இணைந்த சூலகப்பையின் சுவர்களின் மீது அல்லது சூலிலைகள் சந்திக்கும் இடங்களில் சூல் ஒட்டுத்திசு காணப்படும். எ. கா. கடுகு, அர்ஜிமோன். 
தனித்த மைய சூல் ஒட்டுமுறை- பல சூலிலை கொண்ட குறுக்குச் சுவர் அற்ற இணைந்த சூலகப்பையின் மைய அச்சில் சூல் ஒட்டுத்திசு காணப்படும். எ. கா. டையாந்தஸ், பிரிம்ரோஸ். 
அடிச்சூல் ஒட்டுமுறை- ஒரறை கொண்ட சூலகப்பையின் அடிப்புறத்தில் சூல் ஒட்டுத்திசு காணப்படும். எ. கா. சூரியகாந்தி, மாரிகோல்டு.

4. கனிகள். 
உண்மைக்கனி- இவ்வகை கனி மலரின் சூலகப்பையிலிருந்து உருவாகிறது. இவற்றில் சூலக இலைகள் அல்லாத பகுதிகள் இடம் பெறுவதில்லை. 
எ. கா. தக்காளி, மா. 
கருவுறாச் சூலகக்கனி- கருவுறுதல் நடைபெறாமல் உருவாகும் கனி. இவ்வகை கனிகளில் விதைகள் இருக்காது. 
எ. கா. வாழை. 
பொய்க்கனி- இவ்வகை கனி சூலகப்பை மற்றும் அதனுடன் தொடர்புடைய மலரின் துணை பாகங்களிலிருந்து தோன்றுகிறது. பூத்தளம்  (ஆப்பிள்), பூவிதழ்கள் (பலா), பல்பூவடிச்செதில்கள் மற்றும் பூவிதழ்கள் (வால்நட்). 

5. விதை. 
கருசூழ் புரதம் கொண்ட அல்லது கருவூர் கொண்ட விதை-  விதையிலைகள் மெல்லிய சவ்வு போன்று காணப்படும். முதிர்ந்த விதைகளில் கருவூண் நிலைப்பெற்றுக் காணப்படும். இவை வளரும் நாற்றுகளுக்கு ஆரம்ப வளர்ச்சியின் போது ஊட்டம் அளிக்கிறது. எ. கா. ஆமணக்கு, சூரியகாந்தி, மக்காச்சோளம். 
கருசூழ் புரதமற்ற அல்லது கருவூண் அற்ற விதை. 
இதில் வளரும் கருவிற்குத் தேவையான உணவுப்பொருள் உள்ளதால் இதனைப் பயன்படுத்தி வளர்கின்றன. அதனால் முதிர்ந்த விதைகளில் கருவூண் இருப்பதில்லை. இத்தகைய விதைகளில் விதையிலைகள் உணவைச் சேமித்துத் தடிப்புற்று, சதைப்பற்று மிக்கவையாகக் காணப்படுகிறது. எ. கா. பட்டாணி , நிலக்கடலை. 

6. ஃபேபேசி குடும்பத்தின் பொருளாதார முக்கியத்துவம். 
பருப்பு- விக்னா முங்கோ(உளுந்து) , கிளைசின் மாக்ஸ்(சோயா பீன்ஸ்) . 
எண்ணெய்- அராக்கிஸ் ஹைபோஜியா (நிலக்கடலை). 
சாயம்- இன்டிகோ பெரா டிங்க்ட்டோரியா( அவுரி) 
நார்- குரோட்டலேரியா ஜன்ஷியா (சணப்பை). 
உணவு- செஸ்பேனியா கிராண்டிஃபுளோரா (அகத்தி). 
அலங்காரம்- லத்தைரஸ் ஒடோரேட்டஸ்(இனிப்பு பட்டாணி). 
மருந்து- முக்குனா ப்ரூரியன்ஸ் (பூனைக் காலி). 

7. சொலானேசி குடும்பத்தின் பொருளாதார முக்கியத்துவம். 
உணவு- லைக்கோபெர்சிகான் எஸ்குலெண்டம் (தக்காளி). 
நறுமணம்- காப்சிகம் அன்னுவம் (ஊசி மிளகாய்). 
மருந்து- அட்ரோபா பெல்லடோனா. 
புகையிலை- நிக்கோட்டியானா டொபாக்கம். 
அலங்காரம்- பெட்டுனியா ஹைபிரிடா.

8. லிலியேசி குடும்பத்தின் பொருளாதார முக்கியத்துவம். 
அலங்காரம்- குளோரியோஸா சூப்பர்பா. 
மருந்து- அலோ வீரா. 
காய்கறி- அஸ்பாரகஸ். 
பயிர்ப் பெருக்கம்- கோல்சீக்கம் லூட்டியம். 

கலைச்சொல் அகராதி. 
1. அல்யுரோன். 
       கருவூழ் திசுவின் புற அடுக்கு. 
2. பலாஸ்டா. 
      சதைப்பற்றுள்ள வெடியாக் கனி. 
3. கருவூண் திசு. 
         வளரும் கருவிற்கு ஊட்டமளிக்கும் திசு. 
4. இளங்கரு முளை. 
         புரதம் மிக்க இளங்கரு. 
5. துளிர் தாவரங்கள். 
         கீரை விதைத் துளிர் தாவரங்கள்- உணவுத் தயாரிப்பில் பயன்படுத்தப் படுபவை. 
6. கருவுறா சூலகக்கனி. 
        கருவுறுதல் நிகழா கனி உருவாக்கம்.


Technical points 
1. Aestivation. 
Arrangement of sepals and petals in the flower bud. 
Valvate- Margins of sepals or petals do not overlap but just touch each other. Ex. Calotropis. 
Twisted or convolute or contorted. 
One margin of each petal or sepal overlapping on the other petal. Ex. China rose, lady's finger, cotton. 
Imbricate- sepals and petals irregularly overlap on each other; one member of the whorl is exterior, one interior and rest of the three having one margin exterior and the other interior. Ex. Cassia, gulmohur. 
Vexillary Or papilionaceous- Made up of five distinct petals organized in a butterfly shape. One usually large posterior petal called vexillium(standard) two lateral petals- wing (alae) and two anterior sympetalous petals called carina. Ex. Pea and Bean. 

2. Androecium. 
Staminode- sterile stamens. 
Epipetalous- stamens adnate to petals. Ex. Brinjal. 
Epitepalous (epiphyllous) - stamens are adnate to tepals. Ex. Asparagus. 
Monoadelphous- Filaments of stamens connate into a single bundle. Ex. China rose. 
Diadelphous- two bundles. Ex. Pea. 
Polyadelphous- more than two bundles. Ex. Citrus. 

3. Placentation. 
The mode of distribution of placenta inside the ovary. 
Marginal- It is with the placentae along the margin of a unicarpellate ovary. Ex. Pea. 
Axile- The placentae arises from the column in a compound ovary with septa. Ex. China rose, tomato, lemon. 
Parietal- It is the placentae on the ovary walls or upon intruding partitions of a unilocular, compound ovary. Ex. Mustard, Argemone. 
Free central- It is with the placentae along the column in a compound ovary without septa. Ex. Dianthus, primrose. 
Basal- It is the placenta at the base of the ovary. Ex. Sunflower, marigold.

4. Fruits. 
True fruit- Ovary develops into fruit without any non carpellary part. 
Ex. Tomato, mango. 
Parthenocarpic fruit. 
Development of fruits without fertilization. They are seedless fruits. 
Example- Banana. 
False fruit. 
In addition to the ovary the non carpellary (floral) parts like thalamus (Apple), perianth (jack fruit) and involucre and perianth (English walnut) develop into fruit. 

5. Seed. 
Endospermous or albuminous seed- The cotyledons are thin, membranous and mature seeds have endosperm persistent and nourishes the ssedling during it's early development. 
Ex. Castor, sunflower, maize. 
Non endospermous or ex albuminous seed- Food is utilized by the developing embryo and so the mature seeds are without endosperm. In such seeds, cotyledons store food and become thick and fleshy. 
Ex. Pea, groundnut.

6. Economic importance of fabaceae. 
Pulses- Vigna munga, Glycine max. 
Edible oil- Arachis hypogea. 
Dye- Indigofera tinctoria. 
Fibre- Crotalaria juncea
Fodder- Sesbania grandiflora. 
Ornamental- Lathyrus odoratus. 
Medicine- Crotalaria. 

7. Economic importance of solanaceae. 
Food- Lycopersicon esculentum. 
Spice- capsicum annuum. 
Medicine- Atropa belladona
Fumigatory- Nicotiana. 
Ornamental- petunia. 

8. Economic importance of liliaceae. 
Ornamental- Gloriosa superba
Medicine- Aloe vera
Vegetables- Asparagus
Colchicine- Colchicum autumnale. 

Glossary. 
1. Aleurone. 
      Outer layer of the endosperm. 
2. Balausto. 
      Fleshy in dehiscent fruit. 
3. Endosperm. 
    Nutritive tissue for the embryo. 
4. Germ- 
    Protein rich embryo. 
5. Microgreens. 
      Young vegetable greens add flavour in culinary. 
6. Parthenocarpy. 
      Fruit developed without fertilization.

Dr. A. KINGSLIN M.Sc, BEd, Phd

Post Graduate Teacher in Botany

1 Comments

Post a Comment

Previous Post Next Post