20 Days only for NEET 2021


Lesson 26- Reproductive health(Tamil / English )

பாடம் 26- இனப்பெருக்க நலன்

1. பனிக்குடத் துளைப்பு மற்றும் அதன் சட்டபூர்வமான தடை. 

        சிறு குடும்ப விதிகள் மற்றும் குடும்பத்தில் ஆண் குழந்தையைப் பெற்றுக்கொள்ளும் விருப்பம் போன்ற காரணங்களால் மக்கள் தொகையில் பெண்களின் எண்ணிக்கை அபாயகரமான விகிதத்தில் குறைந்து வருகின்றது. 

        இது குழந்தை பிறப்புக்கு முன் செய்யப்படும் ஒரு தொழில் நுட்பமாகும். இத்தொழில் நுட்பம் மூலம் வளர்கருவின் குரோமோசோம் குறைபாடுகளைக் கண்டறியலாம். ஆனால் இத்தொழில்நுட்ப முறையை தவறாகப் பயன்படுத்தி வளர் கருவின் பால் தன்மை கண்டறியப்படுகிறது. 

2. மக்கள் தொகைப் பெருக்கம். 

       மருத்துவ வசதிகளின் மேம்பாடு மற்றும் வளம் நிறைந்த வாழ்க்கை முறை ஆகியவற்றால் மனித வாழ்நாள் உயர்ந்துள்ளது. 

        ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய அறிக்கை இந்திய மக்கள் தொகை 1.26 பில்லியனைக் கடந்துவிட்ட நிலையில் 2022 ஆம் ஆண்டில் மிகப்பெரிய மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இந்தியா சீனாவை விஞ்சி விடும் எனக் குறிப்பிட்டுள்ளது. 

3. கருத்தடை முறைகள். 

        இயற்கை கருத்தடை முறை- இம்முறையில் விந்து செல்களும் அண்ட செல்லும் சந்திப்பது தடுக்கப்படுகின்றது.

      சீரியக்க முறை/ கால இடைவெளி முறை. 

       பாலுணர்வு தொடர் தவிர்ப்பு முறை

       விலகல் முறை கருத்தடை

     பாலூட்டும் கால மாத விடாயின்மை

 4. தடுப்பு முறை- இம்முறையில் அண்டசெல் மற்றும் விந்து செல் சந்திப்பு தடுக்கப்படுவதால் கருவுறுதல் நடைபெறுவது இல்லை. 

      வேதிப்பொருள் தடுப்பு

     இயக்கமுறைத் தடுப்பு

         - திரைச்சவ்வுகள், கருப்பைவாய் மூடிகள், மறைப்புத் திரைகள். 

     ஹார்மோன் வழி தடுப்பு. 

        - வாய்வழி கருத்தடை மாத்திரைகள்

     உள் கருப்பை சாதனங்கள். 

      - தாமிரம் வெளிவிடும் உள் கருப்பை சாதனங்கள்

     - ஹார்மோன் வெளிவிடும் உள் கருப்பை சாதனங்கள்

     - மருந்தில்லா உள் கருப்பை சாதனங்கள்

5. நிரந்தர பிறப்புக் கட்டுப்பாட்டு. 

        முறைகள் எனப்படுபவை மேலும் குழந்தைகள் வேண்டாமென கருதும் மக்கள் பயன்படுத்தும் முறைகளாகும்.

     - அறுவை சிகிச்சை மூலம் இனப்பெருக்க ஆற்றலை நீக்குதல். 

6. மருத்துவ ரீதியான கருக்கலைப்பு. 

       அறுவை சிகிச்சையோ கருவிகள் உள் நுழைத்தலோ இன்றி, விருப்பத்துடனோ அல்லது வேண்டுமென்றோ கருவளர்ச்சியை முடிவுக்குக் கொண்டு வரும் மருத்துவ முறை மருத்துவ ரீதியான கருக்கலைப்பு ஆகும். 

      கருவளர்ச்சியின் ஆரம்பகட்டமான 12 வார காலத்திற்குள் கருக்கலைப்பு செய்வது மிகவும் பாதுகாப்பானதாகும்.

7. பால்வினை நோய்கள். 

       அல்லது பால்வினைத் தொற்றுகள், இனப்பெருக்கப் பாதைத் தொற்று, அல்லது வெனிரியல் நோய்கள் என்றும் முன்பு அழைக்கப்பட்டது. 

       பால்வினை நோய்த் தொற்று உள்ளவருடன் மிக நெருக்கமான பாதுகாப்பற்ற உடலுறவு கொள்வதன் மூலம் இத் தொற்று பரவுகிறது. 

      கல்லீரல் அழற்சி B மற்றும் HIV தொற்றுகள் பாலுறவினால் மட்டுமின்றி, நோயாளி பயன்படுத்திய உட்செலுத்து ஊசிகள், அறுவை சிகிச்சைக் கருவிகள் போன்றவற்றைப் பகிர்வதன் மூலமும் , இரத்தம் செலுத்துதல் மற்றும் தொற்று கொண்ட தாயிடம் இருந்து சேய்க்கும் பரவுகின்றன. 

     15 முதல் 24 வயதினருக்கு இத்தகு தொற்றுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். 

8. மலட்டுத்தன்மை. 

     தடையற்ற பாலிய இணை வாழ்விற்குப் பிறகும் கருவுற இயலாமை அல்லது குழந்தையை உருவாக்க  இயலாமை மலட்டுத்தன்மை எனப்படும். 

       அதாவது, ஒரு ஆண் ஒரு பெண்ணின் அண்டத்தை கருவுறச் செய்யும் அளவிற்கு தரமான அல்லது போதுமான எண்ணிக்கையில் விந்து செல்களை உருவாக்க இயலாமை அல்லது ஒரு பெண்ணால் கருத்தரிக்க இயலாதத் தன்மை. 

9. இனப்பெருக்க துணை தொழில்  நுட்பங்கள். 

      இனச்செல்கள் அல்லது மற்றும் கருமுட்டைகளை உடலுக்கு வெளியில் கையாண்டு கர்ப்பம் அடையச் செய்யும் செயல்முறைத் தொகுப்பு. 

      இத்தொழில் நுட்பத்தில் கருப்பையினுள் விந்தணுக்களை செலுத்துதல், உடல் வெளிக் கருவுறுதல், கரு முட்டையை அண்ட நாளத்தினுள் செலுத்துதல், இனச் செல்களை அண்ட நாளத்தினுள் செலுத்துதல், கரு இடமாற்றம், அண்ட செல் சைட்டோபிளாசத்தினுள் விந்து செல்களை செலுத்துதல், கரு பதிவுக்கு முன்பே மரபியல் குறைகளைக் கண்டறிதல், அண்டசெல் மற்றும் விந்து செல்கள் தானம் மற்றும் வாடகைத் தாய்மை ஆகியன அடங்கும். 

10. கருவின் குறைபாடுகளை கர்ப்பகாலத் தொடக்கத்திலேயே கண்டறிதல். 

       மீயோலி வரியோட்டம்

      பனிக்குடத் துளைப்பு

      கோரியான் நுண்  நீட்சி மாதிரி ஆய்வு

        கரு கண்காணிப்புக் கருவி. 

கலைச்சொல் அகராதி. 

1. செல் தன் மடிவு.

         பல செல் உயிரிகளில் காணப்படும் நிரல் சார்ந்த செல் சிதைவு. 

2. வலு குறைக்கப்பட்டது. 

       வீரியம் குறைதல். 

3. தற்கதிர்வீச்சு வரைபட முறை. 

        X கதிர் அல்லது ஒளி வரைபட தகட்டினை பயன்படுத்தி, கதிர் வீச்சுடைய உயிரினங்களைக் கண்டறிதல். 

4. பாக்டீரியோஃபேஜ். 

       பாக்டீரியாக்களைத் தாக்கும் வைரஸ். 

5. உயிரிய புவியமைப்பு. 

         உயிரினங்கள் புவியப் பரவலை பற்றிய அறிவியல் ஆகும்.

Technical points 

1. Amnicentesis and it's statuory ban. 

      Due to small family forms and the skewed choice for a male child, female population is decreasing at an alarming rate. 

       It is a prenatal technique used to detect any chromosomal abnormalities in the foetus and it is being often misused to determine the sex of the foetus. 

2. Population explosion. 

       Increased health facilities and better living conditions have enhanced longevity. 

        According to a recent report from the UN, India's population has already reached 1.26 billion and is expected to become the largest country in population size, surpassing China around 2022.

3. Birth control methods. 

     Natural method- is used to prevent meeting of sperm with ovum. 

      Periodic abstinence/ rhythm method. 

     Continuous abstinence

    Coitus interruptus

    Lactational amenorrhoea

4.Barrier methods- the ovum and sperm are prevented from meeting so that fertilization does not occur. 

     Chemical barrier

     Mechanical barrier

           -Diaphrams, cervical caps and vaults. 

    Hormonal barrier

          - oral contraceptives

    Intrauterine devices

         - copper releasing IUDs. 

         - Hormone releasing IUDs. 

         - Non medicated IUDs. 

5. Permanent birth control methods- are adopted by the individuals who do not want to have any more children. 

     - Surgical sterilisation methods.

6. Medical termination of pregnancy. 

    Medical method of abortion is a voluntary or intentional termination of pregnancy in a non surgical or non invasive way. 

        Early medical termination is extremely safe upto 12 weeks of pregnancy and generally has no impact on a women fertility. 

7. Sexually transmitted diseases. 

      Or venereal diseases or reproductive tract infections are called a sexually transmitted infections. 

       Normally STI are transmitted from person to person during intimate sexual contact with an infected partner. 

      Infections like Hepatitis B and HIV are transmitted sexually as well as by sharing of infusion needles, surgical instruments with infected people, blood transfusion or from infected mother to baby.

     People in the age of 15 to 24 years are prone to these infections. 

8. Infertility. 

        Inability to conceive or produce children even after unprotected sexual cohabitation. 

       Inability of a man to produce sufficient numbers or quality of sperm to impregnate a woman or inability of a woman to become pregnant or maintain a pregnancy. 

9. Assisted reproductive technology. 

      A collection of procedures which includes the handling of gametes and or embryos outside the body to achieve pregnancy. 

         It includes intra uterine insemination, in vitro fertilization, embryo transfer, zygote intra fallopian transfer, gamete intrafallopian transfer, intra cytoplasmic sperm injection, preimplantation genetic diagnosis, oocyte and sperm donation and surrogacy. 

 10. Detection of foetal disorders during early pregnancy. 

      Ultrasound scanning

      Amniocentesis

     Chorionic villus sampling

     Foetoscope. 

Glossary. 

1. Apoptosis. 

       Is a form of programmed cell death that occurs in multicellular organisms. 

2. Attenuated. 

       Reduced in virulence. 

3. Autoradiography. 

       It is the use of X ray or photographic film to detect radioactive materials. 

4. Bacteriophages. 

       Viruses which infect bacterial cells. 

5. Biogeography. 

         The scientific study of the geographic distribution of organisms.

Dr. A. KINGSLIN M.Sc, BEd, Phd

Post Graduate Teacher in Botany

Post a Comment

Previous Post Next Post