26 Days only for NEET 2021


Lesson 22- chemical coordination and integration. Part 1  (Tamil / English )

பாடம் 22- வேதிய ஒருங்கிணைப்பு. பகுதி 1

1. நாளமில்லாச் சுரப்பிகள். 
       நமது உடலில் நடைபெறும் உடற்செயலியல் பணிகளை நரம்பு மண்டலமும் நாளமில்லாச் சுரப்பி மண்டலமும் மேற்கொள்கின்றன. 
       ஹார்மோன்கள்- நாளமில்லாச் சுரப்பிகள் சுரக்கும் ஹார்மோன்கள் வளர்சிதை மாற்றப் பணிகளில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஹார்மோன்கள் எனும் வேதித்தூதுவர்கள் இரத்தத்தில் வேதிய சமிக்ஞைகளாக குறிப்பிட்ட சில திசுக்கள் அல்லது சில உறுப்புகளின் மேல் செயல்படுகின்றன. இத்தகு திசுக்கள் அல்லது உறுப்புகளுக்கு முறையே இலக்குத்திசுக்கள் அல்லது இலக்கு உறுப்புகள் என்று பெயர். 

2. ஹைபோதலாமஸ். 
        மூளையின் கீழ்ப்புற நீட்சியாக பிட்யூட்டரி சுரப்பியின் தண்டுப் பகுதியில் முடியும் ஒரு கூம்பு வடிவ அமைப்பு. இது நரம்பு மண்டலம் மற்றும் நாளமில்லாச் சுரப்பி தொகுப்பை இணைக்கிறது. 
       மூளையின் அடிப்பகுதியில் உள்ள ஹைபோதலாமிக் ஹைபோஃபைசியல் போர்ட்டல் இரத்தக்குழல்  ஹைபோதலாமஸையும் முன்பகுதி பிட்யூட்டரியையும் இணைக்கிறது. 

3. பிட்யூட்டரி சுரப்பி அல்லது ஹைபோபைசிஸ். 
          நீள் கோள வடிவ பிட்யூட்டரி சுரப்பி மூளையின் அடிப்பகுதியில் காணப்படும் ஸ்பீனாய்ட் எலும்பில் உள்ள செல்லா டர்சிகா என்னும் குழியில் அமைந்துள்ளது. இது இன்ஃபன்டிபுலம் எனும் சிறிய காம்பு போன்ற அமைப்பால் மூளையின் ஹைபோதலாமஸ் பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. 

4. அடினோஹைபோஃபைசிஸில் சுரக்கும் ஹார்மோன்கள். 
      வளர்ச்சி ஹார்மோன்
     தைராய்டைத் தூண்டும் ஹார்மோன். 
      அட்ரினோகார்டிகோட்ரோபிக் ஹார்மோன். 
       ஃபாலிக்கிள் செல்களைத் தூண்டும் ஹார்மோன். 
         லூட்டினைசிங் ஹார்மோன். 
       லூட்டியோட்ராபிக் ஹார்மோன்/ லூட்டியோட்ரோபின். 

5. நியூரோஹைபோஃபைசிஸ் ஹார்மோன்கள். 
      வாஸோப்ரஸ்ஸின் அல்லது ஆன்டிடையூரடிக் ஹார்மோன். 
         ஆக்ஸிடோசின். 

6. பீனியல் சுரப்பி. 
         மனிதனில், எபிபைசிஸ் செரிப்ரை அல்லது கொனேரியம் என்றழைக்கப்படும் பீனியல் சுரப்பி, மூளையின் மூன்றாவது வென்ட்ரிகிளின் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ளது. இது பாரன்கைமா மற்றும் இடையீட்டுச் செல்களால் ஆனது. 
        இது மெலடோனின் மற்றும் செரடோனின் எனும் ஹார்மோனைச் சுரக்கின்றது. மெலடோனின் உறக்கத்தையும் , செரடோனின் விழிப்பையும் ஏற்படுத்துவதன் மூலம் நாள்சார் ஒழுங்கமைவு இயக்கத்தினைக் கட்டுபடுத்துவதில் இது முக்கியப் பங்கு வகிக்கின்றது. 

7. தைராய்டு சுரப்பி. 
       ஒரிணைக் கதுப்புகள் கொண்ட வண்ணத்துப்பூச்சி வடிவம் கொண்ட தைராய்டு சுரப்பி மூச்சுக் குழலைச் சுற்றிக் குரல்வளைக்குக் கீழ் அமைந்துள்ளது. தைராய்டு சுரப்பி நமது உடலில் உள்ள மிகப்பெரிய நாளமில்லாச் சுரப்பியாகும். இதன் பக்கக் கதுப்புகள் இரண்டும் இஸ்துமஸ் எனும் மையத் திசுத் தொகுப்பினால் இணைக்கப்பட்டுள்ளது. 
           ஒவ்வொரு கதுப்பும் பல நுண்கதுப்புகளால் ஆனது. நுண்கதுப்புகள் அசினி எனும் ஃபாலிகிள்களால் ஆனவை. 

8. பாரா தைராய்டு சுரப்பி. 
        மனிதனின் தைராய்டு சுரப்பியின் பின்பக்கச் சுவரில் நான்கு சிறிய பாரா தைராய்டு சுரப்பிகள் உள்ளன. 
      பாரா தைராய்டு சுரப்பி, முதன்மை செல்கள் மற்றும் ஆக்ஸிஃபில் செல்கள் என்ற இருவகைச் செல்களால் ஆனது. 
       முதன்மைச் செல்கள் பாரா தைராய்டு ஹார்மோனை ஜ சுரக்கின்றது. ஆக்ஸிஃபில் செல்களின் பணி இன்னும் கண்டறியப்படவில்லை. 
      இது இரத்தத்தில் உள்ள கால்சியத்தின் அளவை உயர்த்தும் ஹார்மோன் ஆகும். 

9. தைராக்ஸின் உற்பத்திக்கு அயோடின் அவசியம். 
       இயல்பான அளவு தைராக்ஸின் உற்பத்திக்கு வாரத்திற்கு 1 மில்லிகிராம் அயோடின் தேவை. அயோடின் பற்றாக்குறையைத் தடுக்க நாம் பயன்படுத்தும் சாதாரண உப்பான சோடியம் குளோரைடில் 1,00,000 பகுதிக்கு 1 பகுதி சோடியம் அயோடைடு சேர்க்கப்படுகிறது. 

10. பாலூட்டிகளில் பார்ஸ் இன்டர்மீடியாவின் பங்கு முக்கியத்துவமற்றது. ஆனால் பிற முதுகெலும்பிகளில் இப்பகுதி மெலனோசைட் தூண்டும் ஹார்மோனைச் சுரக்கின்றது. இதன் பணி தோலின் நிற மாற்றத்தைத் தூண்டுவது ஆகும். 

கலைச்சொல் அகராதி.
1. வாஸா ரெக்டா (நேர் குழல்கள்). 
       ஜக்ஸ்டா கிளாமருலார் நெஃப்ரான்களின் குழல் சூழ் இரத்த நுண் நாளங்கள் ஹென்லேயின் வளைவை ஒட்டி செல்லும் இரத்த நாளங்கள் ஆகும். 

2. நோய் கடத்திகள். 
        இவை நோயை உண்டாக்குவதில்லை. ஆனால் ஒரு ஒம்புயிரிலிருந்து மற்றொன்றிற்கு நோயைப் பரப்பு கின்றன

Technical points 
1. Endocrine glands. 
        Physiological functions of our human body is regulated and coordinated by both neural and endocrine systems. 
      Hormones- The endocrine system influences the metabolic activities by means of hormones which are chemical messengers released into the blood and circulated as chemical signals and acts specifically on certain organs or tissues called target organs and target tissues. 

2. Hypothalamus. 
         Is a small cone shaped structure that projects downward from the brain ending into the pituitary stalk. It interlinks both the nervous system and endocrine system. 
     In basal region of the brain, the hypothalamic hypophyseal portal blood vessel connects hypothalamus and anterior pituitsry. 

3. Pituitary gland or Hypophysis. 
       Is ovoid in shape and is located in the sella turcica, a bony cavity of the sphenoid bone at the base of brain and connected to the hypothalamic region of the brain by a stalk called infundibulum. 

4. Hormones of Adenohypophysis. 
    Growth hormone(GH) 
     Thyroid stimulating hormone or thyrotropin(TSH). 
     Adreno cortico tropic hormone (ACTH) 
     Follicle stimulating hormone (FSH) 
     Luteinizing hormone (LH) 
     Luteotropic hormone (LTH). 

5. Hormones of neurohypophysis. 
        Vasopressin or antidiuretic hormone (ADH) 
     Oxytoxin (means quick birth). 

6. Pineal gland. 
       In human, the pineal gland or epiphysis cerebri or conarium is located behind the third ventricle of brain and is formed of parenchymal cells and interstitial cells. It secretes the hormone melatonin. 
       Melatonin which plays an central role in the regulation of circadian rhythm of our body and maintains the normal sleep wake cycle.

7. Thyroid gland. 
       The butterfly shaped thyroid gland is a bilobed gland located below the larynx on each side of upper trachea. It is the largest lobes are connected by a median tissue mass called isthmus. 
     Each lobe is made up of many lobules. The lobules consist of follicles called acini.

8. Parathyroid gland. 
      In human four tiny parathyroid glands are found in the posterior wall of the thyroid glands. 
      This gland it's composed of two types of cells, the chief cells and oxyphil cells. 
      The chief cells secrete 
    Parathyroid hormone and the functions of oxyphil cells are not known. 
    It is a hypercalcemic hormone. 

9. Iodine is required for formation of thyroxine. 
    To produce normal quantities of thyroxine, about 1mg/week of iodine is required. To prevent iodine deficiency common table salt is iodised with 1 part sodium iodide to every 1,00,000 parts of sodium chloride. 

10. In mammals, the role of pars intermedia is insignificant, but in other vertebrates it secretes melanocyte stimulating hormone (MSH). MSH induces pigmentation in skin. 

Glossary. 
1. Vasa recta. 
       The peritubular capillaries of the juxtaglomerular nephrons forms vascular loops which run in close association with the loops of Henle. 

2. Vectors. 
      A vector is an organism that does not cause disease itself but which spreads infection by conveying pathogens from one host to another.

Dr. A. KINGSLIN M.Sc, BEd, Phd

Post Graduate Teacher in Botany

Post a Comment

Previous Post Next Post