விஸ்வேஸ்வரய்யா | தினம் ஒரு அறிவியல் மேதை

 


விஸ்வேஸ்வரய்யா

இந்தியாவின் பொறியியல் துறையின் தந்தை விஸ்வேஸ்வரய்யா. எளிமையான குடும்பத்தில் பிறந்த இவர் பன்னிரண்டு வயதில் தந்தையை இழந்தார். அதற்குப் பின்பு பிள்ளைகளுக்கு டியுஷன் எடுத்து தன் கல்வியைத் தொடர்ந்தார், பி.ஏ. பட்டப்படிப்பில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்றுத் தேறினார் பின் பூனாவில் பொதுவியல் (சிவில் இஞ்சினியரிங் ) துறையில் படித்துத் தங்கப்பதக்கம் பெற்றார் பெர்க்லே விருது அவருக்கு வழங்கப்பட்டது. ஆங்கிலேய அரசின் பொதுப்பணி துறையில் சேர்ந்தார் வந்தன பணிகள். பைப் சிபானை கொண்டு ஒரு கரையில் இருந்து மறுகரைக்குப் பூனாவில் நீரைகொண்டு போய்ச் சேர்க்கும் வடிவமைப்பை உருவாக்கினார். கச்சிதமாக வேலை செய்தது. அடுத்தது பம்பாயின் காடகவாசாலா அணையில் அவருக்கான சவால் காத்துக்கொண்டிருந்தது. அணையின் கொள்ளளவை உயரத்தை ஏற்றாமல் அதிகரிக்க வேண்டிய சவால் தான் அது . எட்டடி உயரத்தில் நீரின் உயரத்துக்கு ஏற்ப .

உயர்ந்து கொள்ள மற்றும் தாழ்ந்து கொள்ளும் வகையில் தானியங்கி கேட் ஒன்றை வடிவமைத்தார் .அது இன்றும் பயன்படுகிறது.

சிந்து மாகாணம், சூரத் எனப் பல பகுதிகளின் நீர் தாகத்தைத் தன் திட்டங்களின் மூலம் தீர்க்கிற பணியைச் செய்தார். இருந்த பொறியியல் அதிகாரிகளிலேயே தலைசிறந்த வல்லுனராக இருந்த பொழுதும் அவருக்கு உயர் பதவிகள் இந்தியர் என்பதால் மறுக்கப்பட்டன. மனம் வெறுத்து பதவியைத் துறந்து வெளியே வந்தார் மனிதர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தன் நாட்டை ஹைதராபாத் நிஜாம் சரி செய்ய இவரை அழைத்தார். திட்டங்கள் போட்டு அணைகள் மற்றும் வடிகால் அமைப்புகளை உருவாக்கி முரண்டு பிடித்த முஸியை அடக்கி விட்டு கிளம்பினார்.

சொந்த மாகாணம் அழைத்தது அது தான் தமிழகத்துக்குக் கலிகாலம் ஆனது. அங்கே பத்து கோடி ரூபாய் மதிப்பீட்டில் கிருஷ்ண ராஜசாகர் அணையைக் கட்ட அவர் முயன்ற பொழுது அரசர் யோசித்தார். அதன் மூலம் மின்சாரம் தயாரித்துப் பிற மாநிலத்துக்கு விற்கலாம் என இவர் சொல்லி சாதித்தார். காவிரியின் நடுவே ஒப்பந்தத்தை மீறி அணை
கட்டினார்கள். கர்நாடகம் பசுமை போர்த்திக்கொண்டது .

தொழிற்சாலைகள் வளர்ந்தன. ஹிந்துஸ்தான் . ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் முன்னோடி நிறுவனம் இவரால் அம்மாகாணத்தில் அமைந்தது. உருக்காலையை உருவாக்கினார். மாநிலத்தைத் தொழில்மயபடுத்தினார். இவரின் பிறந்தநாள் தேசிய பொறியியலாளர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இவருக்குப் 'பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டது.

Post a Comment

Previous Post Next Post