ராபர்ட் கோக் | தினம் ஒரு அறிவியல் மேதை

 


ராபர்ட் கோக்
புகழ்பெற்ற மருத்துவரான ராபர்ட் கோக், ஜெர்மனியின் ஹெனோவர் நகரில், 1843-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி ஜெர்மனியின் ஹெனோவர் நகரில் பிறந்தார். ஹெர்மன் கோக் - மதில்டே ஜூலி ஹென்ரிடே பெய்வாண்ட் இவரது பெற்றொராவர்.

இவர் பள்ளியில் சேரும் முன்னரே வாசிப்பதற்கும் எழுதுவதற்கும் கற்றுக்கொண்டார். 1862-ம் ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்த அவர், அறிவியல் மற்றும் கணிதத்தில் சிறந்து விளங்கினார்.

தனது 19-வது வயதில் இயற்கை அறிவியல் பயில்வதற்காக கொட்டிங்கன் பல்கலைகழகத்தில் சேர்ந்தார். இருப்பினும் இடையிலேயே மருத்துவ துறையின் மீது கொண்ட ஈடுபாட்டினால் தனது துறையை மாற்றிக்கொண்டார். 1866-ம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்த அவர் மருத்துவராக பணியாற்றத் தொடங்கினார். 1885 முதல் 1890-ம் ஆண்டு வரை பெர்லின் பல்கலைகழகத்தில் பேராசிரியராகவும் பணியாற்றினார். அதன்பின் பிரஷ்யன் தொற்றுநோய் நிறுவனத்தின் இயக்குனராக செயலாற்றினார்.

இவர் 1877-ல் பாசில்லஸ் ஆந்த்ராசிஸ் எனும் நோய்க்கு காரணமான பாக்டீரியாவை கண்டறிந்தார். அதன்பின் 1882-ல் காசநோய் ஏற்பட காரணமாக இருக்கும் மைக்கோபாக்டீரியம் என்ற நுண்ணுயிரையும் கண்டுபிடித்தார். 1884-ம் ஆண்டில் காலரா குறித்த ஆய்வை தொடங்கிய அவர், அந்த நோய் தாக்க காரணமாக இருக்கும் வைபிரியோ காலரா என்ற நுண்ணுயிரை கண்டுபிடித்தார். அவரது இந்த கண்டுபிடிப்புகளே பின்நாளில் அந்த நோய்களுக்கு தடுப்புமருந்து கண்டுபிடிக்க முக்கிய காரணமாக அமைந்தது.

காசநோய் பற்றிய இவரது ஆய்வுக்காக 1905-ம் ஆண்டு இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அதன்பிறகு 1908-ம் ஆண்டு, சிறந்த மருத்துவர்களை கவுரவப்படுத்துவதற்காக ராபர்ட் கோக் பதக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது.
27-05-1910 அன்று தனது 66-வது வயதில் மரணம் அடைந்தார்,

1 Comments

  1. I'm your student sir. Very very useful and nice explanation. Thank you sir👏🏻👏🏻🙏🏻

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post

Follow Outlines of Botany