11 Bio Botany Lesson 4 Book Back Q&A Tamil

 

பாடம்-4. இனப்பெருக்க புற அமைப்பியல்

புத்தக பயிற்சி வினாவிடைகள் 

2021-22

ஒரு மதிப்பெண் வினாக்கள்

1 . வெக்ஸில்லரி இதழமைவு இந்த குடும்பத்தின் பண்பாகும்

அ). ஃபேபேஸி                                                         ஆ). ஆஸ்ட்ரேஸி 

இ). சொலனேஸி                                                     ஈ). பிராஸிக்கேசி

2. இணைந்த சூலக இலைகள் கொண்ட சூலக வட்டம் இவ்வாறு அழைக்கப்படும்.

அ). இணையாச் சூலக இலை சூலகம்         ஆ). பல சூலக இலை சூலகம்

இ). இணைந்த சூலக இலை சூலகம்              ஈ). மேற்கூறிய எதுவுமில்லை

3.திரள்கனி இதிலிருந்து உருவாகிறது

அ) . பல இணையாச்சூலக இலை சூலகப்பை 

ஆ) . பல இணைந்த சூலக இலை சூலகப்பை

இ) . பல சூலக இலை சூலகப்பை 

ஈ) . முழு மஞ்சரி

4.ஒரு மஞ்சரியில் மலர்கள் பக்கவாட்டில் அடி முதல் நுனி நோக்கிய வரிசையில் அமைந்திருக்கும், இளம்மொட்டு

அ) . அண்மையிலிருக்கும்                             ஆ) . சேடீநுமையிலிருக்கும்

இ) . இடைச்செருகப்பட்டிருக்கும்                ஈ) . எங்குமிருக்கும்

5.உண்மைக்கனி என்பது

அ) . மலரின் சூலகப்பை மட்டுமே கனியாக உருவாவது

ஆ) . மலரின் சூலகப்பை மற்றும் புல்லி வட்டம் கனியாக உருவாகது

இ) . மலரின் சூலகப்பை, புல்லிவட்டம் மற்றும் புத்தளம் கனியாக உருவாவது

ஈ) . மலரின் அணைத்து வட்டங்களும் கனியாகஉருவாவது

6.புவடிச்செதிலுடைய, புக்காம்புச் செதிலற்ற, இருபால்மலர், முழுமையான ஐந்தங்கமலர், தனித்த புல்லிவட்டம், தனித்த அல்லிவட்டம், மேல்மட்டச்சூலகப்பை, கொண்ட மலரின் மலர் சூத்திரத்தினை எழுதுக

7.கீழ் கண்டவற்றிற்கு கலைச்சொற்கள் தருக

அ) ஒருவளமற்ற மகரந்தத்தாள் - மலட்டுமகரந்தத்தாள்கள்

ஆ) மகரந்தத்தாள்கள் ஒரு கட்டாக இணைந்த மகரந்தத்தாள்கள் - ஒருகற்றைமகரந்தத்தாள்கள்

இ) அல்லி இதடிநகளுடன் இணைந்திருத்தல் - அல்லி ஒட்டியவை


8 . சூல் ஒட்டுமுறையின் வகைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக

சூலகப்பையில் சூல் ஒட்டுத்திசு அமைந்திருக்கும் விதத்திற்கு சூல் ஒட்டுமுறை என்று பெயர்.

1. விளிம்பு சூல் ஒட்டுமுறை ஒற்றைச்சூலகத்தின் விளிம்பில் காணப்படும்.

சூல் ஒட்டுதிசுவில் சூல்கள் ஒட்டியிருக்கும் .எ.கா - ஃபேபேஸி

2. அச்சு சூல்ஒட்டுமுறை சூல் ஒட்டுத்திசுவானது குறுக்குச்சுவருடைய பல

சூலிலையுடைய இணைந்த சூலக பையின் மைய அச்சிலிருந்து தோன்றும்.

எ.கா.-ஹைபிஸ்கஸ் , தக்காளி, எலுமிச்சை

3. தடுப்பு சுவர் சூல்ஒட்டு முறை சூல்கள் சூலகப்பை பிரிக்கும் குறுக்கு

சுவர்களின் புறப்பரப்பில் ஒட்டியிருக்கும்.எ.டு .- நிம்ஃபயேஸஸி

4. சுவர் சூல்ஒட்டு முறை ஓரறை கொண்ட பல சூலிலையுடைய இணைந்த

சூலக பையின் சுவர்களின் மீது (அ) சூலிலைகள் சந்திக்கும் இடங்களில்

சூல் ஒட்டுத்திசு காணப்படும். எ.கா .கடுகு, ஆர்ஜிமோன், வெள்ளரி.

5. தனித்த மைய சூல்ஒட்டு முறை பல சூலிலை கொண்ட குறுக்குசுவர்

அற்ற இணைந்த சூலக பையின் மைய அச்சில் சூல் ஒட்டுத்திசு காணப்படும்.

எ.கா. கேரியோஃபில்லேஸி, டையாந்தஸ், பிரிம்ரோஸ்.

6. அடிச் சூல்ஒட்டு முறை ஓரறை கொண்ட சூலகப்பையின் அடிப்புறத்தில் சூல்

ஒட்டுத்திசு காணப்படும். எ.கா.சூரியகாந்தி ( ஆஸ்டரேஸி), மாரிகோல்டு.


9.கூட்டுக் கனியை திரள் கனி யிலிருந்து வேறுபடுத்துக

வ.எண் கூட்டுக் கனி திரள் கனி
1 ஒரு தனி மலரின் ஒவ்வொரு தனி சூலகமும் ஒரு எளிய சிறு கனியாக மாறுகிறது. இந்த சிறு கனிகளின் தொகுப்பே திரள்கனி. முழு மஞ்சரிக் காம்வூம் சேர்ந்து உருவாகும் பல் கூட்டுக்கனியே கூட்டுக்கனி.
2 உள்ஒட்டு சதைக்கனி ,உறை ஒட்டா வெடியாக்கனி , ஒரு புற வெடிகனி, சதைக்கனியாக உருவாகும். கூட்டு சதைக் கனி ,கோளப் பூத்தளக்கனி உருவாகும்
3 எ.கா -அன்னோனா ,பாலியால்தியா எ.கா- அன்னாசி, பலா. ஃபைகஸ்

10. தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் சதைக் கனி யின் வகைகளை விவரி
சதைக்கனி என்பது கனித்தோல் சதைப்பற்றுடனும் சாறு நிறைந்தும் காணப்படுவது.
கனித்தோல் வெளித்தோல், நடுத்தோல், உட்தோல் என வேறுபடுகிறது.
தோலின் எப்பகுதி சதைப்பற்றுள்ளதாக அமைந்துள்ளது அடிப்படையில் பலவகைப்படும்.

1.சதைக்கனி - இரண்டு (அ) பல சூலக இலைகள் இணைந்து உருவாகும் கனி.
இதில் வெளித்தோல் மெல்லியதாகவும், நடுத்தோலும் உட்தோலும் வேறுபாடற்று சாறு நிறைந்த பகுதியாகும்.
அதில் விதைகள் புதைந்து காணப்படுகின்றன. எ.கா-தக்காளி, திராட்சை, கத்தரி

2. உள்ஒட்டுச்சதைக்கனி - ஒற்றை சூலகப்பையில் இருந்து உருவாகும் ஒரு விதை கனி. இதன் வெளித்தோல் இறுக்கமாகவும், நடுத்தோல் சதைப்பற்றுடனும், உட்தோல் கல் போன்று விதையை சூழ்ந்தும்காணப்படும்.
எ.கா-மா,தென்னை

3.வெளி ஒட்டுச்சதைக்கனி –கீழ்மட்டசூல் பையை கொண்டு மூன்று சூலக இலை இணைந்து உருவாகிறது. வெளித்தோல் தோல் போன்றும், நடுத்தோல் சதைப்பற்றுடனும் உட்தோல் மெல்லியதாகவும் காணப்படும். 
எ.கா-வெள்ளரி, பூசணி

4. எலுமிச்சை வகைக்கனி –பல சூலகஅறைகளைக்கொண்ட மேல் மட்ட சூலகப் பையிலிருந்து தோன்றுகிறது.
வெளித்தோல் எண்ணெடீநு சுரப்பிகளுடனும், நடுத்தோல் நார்த் தன்மையுடனும், உட்தோல் சதைப் பற்றுள்ள பல சாரு
நிறைந்த தூவி போன்றது. எ.கா-எலுமிச்சை,ஆரஞ்சு

5.பொய்க்கனி –பல சூலக இலை சூலகத்தில் இருந்து தோன்றுகிறது.
பூத்தளம் சூல் பையுடன் இணைந்து கனி உறுவாகிறது.
புத்தளம் சதைப்பற்றுள்ளதாக மாறி கனியை சூழ்ந்து காணப்படுகிறது.
கனியின் வெளித்தோல் மெல்லியதாகவும், உட்தோல் குருத்தெலும்பு போன்றும் காணப்படுகிறது. எ.கா-ஆப்பிள்,பேரி

6. பலாஸ்டா-பல சூலக அறைகள் கொண் கீழ்மட்டச்சூல்பையிலிருந்து தோன்றுகிறது.
கனித்தோல் கடினமாக தோல் போன்றும், விதையுறை உண்ணும் பகுதியாகவும் உள்ளது. எ.கா–மாதுளை



Post a Comment